ராம் ராஜ்ஜியத்தில் 'வலி'கூட நகைச்சுவைதானா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 21, 2022

ராம் ராஜ்ஜியத்தில் 'வலி'கூட நகைச்சுவைதானா?

உத்தரப் பிரதேசமாநிலம்  அலகாபாத் மாவட்டத்தில் உள்ள சதர் தாலுகாவில் சிவானி என்ற பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். 

இந்த பாலியல்வழக்கில் சில அரசியல் பிரமுகர்களின் தலையீடு காரணமாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்குவதாக பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் பெற்றோர் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். 

 தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவியான சுனிதா பஞ்சல் உத்தரப் பிரதேச பாஜக மேனாள் மகளிர் அணியின் தலைவியாக பதவியில் இருந்தவர் ஆவார். 

 அவரது புகாரை ஏற்றுக்கொண்டு அவரை நேரில் அழைத்துள்ளார். அங்கு சென்ற பாதிக்கப்பட்ட பெண் சிவானி   தான் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப் பட்டது குறித்து வாக்குமூலம் கொடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது சதர் தாலுகா காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஞானேந்திர திரிவேதி உள்ளிட்ட வர்கள் அமர்ந்திருந்தனர். 

குற்றவாளி ஆளும் கட்சியைச் சேர்ந்த நபர் என்று கூறப்பட்ட நிலையில் பெண் தன்மீது நடந்த கொடூ ரத்தைச் சொல்லிகொண்டு இருக்கும் போதே தேசிய மகளிர் ஆணையத்தலைவி காவல்துறை கண்காணிப் பாளரும் ஜோக்குகளைப் பகிர்ந்துகொண்டு சிரித்துக் கொண்டு இருந்தனர். 

இதை பெண்ணின் வழக்குரைஞர் மொபைலில் பட மெடுத்து - இது எப்படிப்பட்ட நீதிவழங்கும் முறை! ஒரு பள்ளி மாணவி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உள்ளார். குற்றவாளிகள் பிரபல அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்கள், இதனால் காவல்துறை அந்த வழக்கை பதிவு செய்ய மறுக்கிறது. 

 இதனை அடுத்து அந்தப்பெண் தேசிய மகளிர் ஆணையத்தில் முறையிடுகிறார். 

 வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு மிகவும் துண்பத்தில் இருக்கும் சிறுமிக்கு ஆறுதல் கூறி குற்ற வாளிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையிடும் பொறுப்பில் இருக்கும் மகளிர் ஆணையத்தில் தலை வியும் மேனாள் பாஜக மகிளா மோர்ச்சாவின் தலைவி யுமான சுனிதா பன்சால் எந்த காவல்துறை அதிகாரி வழக்கை பதிவு செய்ய மறுத்தாரோ அவரோடு ஜோக் அடித்துக்கொண்டு இருக்கிறாரே?  இதுதான் மகளிர் ஆணையத்தலைவி நீதிவழங்கும் முறையா என்று அனைத்துத் தரப்பினரும் குமுறுகின்றனர்.


No comments:

Post a Comment