தந்தை பெரியார், அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரால் நடத்தப் பட்டு வந்த திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் வளர்க்கப் பட்டு, பிறகு திருமணம் செய்து வைக்கப்பட்டு உடுமலைப்பேட்டை யில் வாழ்ந்து வந்த தங்கை திருமதி. அரசம்மை (வயது 67) அவர்கள் உடல் நலக் குறைவால் கோவை மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலன் தராது நேற்று (24.5.2022) மறைவுற்றார் என்ற செய்தி கேட்டு மிகவும் துன்பமும், துயரமும் அடைகிறோம்.
"நம் குழந்தைகள் இல்லத்துப் பெண்களில் ஒருவரையே திருமணம் செய்து வாழ்வேன்" என்ற தீவிர பெரியார் கொள்கை கொண்ட ஆசிரியர் நடராசன் அவர்களின் வாழ்விணையரானார் அரசம்மை அவர்கள். இருபிள்ளை களுடன் (ஒரு ஆண், ஒரு பெண்) அன்புடன் வாழ்ந்தனர்.
தோழர் நடராசன் அவர்களும் பணி ஓய்வு பெற்று உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் மாறாத கொள்கை உணர்வுடன் வாழ்ந்து வருபவர்.
தங்கை அரசம்மை மறைவினால் வாடும், வருந்தும் அவரது வாழ்விணையர் நடராசன், மகள், மகன் மற்றும் குடும்பத்தினர் - கொள்கைக் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:
Post a Comment