கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரை
தஞ்சை,மே25- தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகில் திராவிடர் கழக இளை ஞரணி, திராவிடர் கழக மாணவர் கழகம், திராவிடர் மகளிர் பாசறை சார்பில் வங்கி எழுத்தர் பணிக்கு தமிழில் தேர்ச்சி கட்டாயமில்லை? தமிழ்நாட்டு இளைஞர் களின் வேலை வாய்ப்பை பறிக்கும் ஒன்றிய அரசின் சதித்திட்டத்தை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (24.5.2022) மாலை திராவிடர் கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிகுமார் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த அனை வரையும் வரவேற்று தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல் உரையாற்றினார்.
தஞ்சை மாவட்ட இளைஞரணி தலைவர் ரெ.சுப்ரமணியன், அமைப்பாளர் ர.மணிகண்டன், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் பா.விஜயகுமார், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் அ.சுப் பிரமணியன், மாவட்ட மாணவர் கழக துணை தலைவர் ச.சிந்தனையரசு, மாவட்ட மாணவர் கழக துணை செயலாளர் ஏ.விடுதலையரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழக மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் ச.அஞ்சுகம், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, தஞ்சை மண்டல செயலாளர் மு.அய்யனார், திராவிடர் கழக காப்பாளர் வெ.ஜெயராமன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற் றினார்.
திராவிடர் கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
திராவிடர் கழக மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் அதிரடி க.அன்பழகன், கழக துணை தலைவர் கவிஞர்
கலி.பூங்குன்றன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
கவிஞர் அவர்கள் தன்னுடைய கண்டன உரையில் ஒன்றாம் வகுப்பு முதல் பனி ரெண்டாம் வகுப்புவரை தமிழை ஒரு பாடமாக கொண்டு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டு வேலை வாய்ப்புகளில் முன் னுரிமை தரவேண்டும் என்று தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கைவைத்து உரையாற்றினர்.
தஞ்சை மாவட்ட துணை செயலாளர் அ.உதிர்ப்பதி, தஞ்சை மாநகர அமைப்பாளர் வன்னிப்பட்டு தமிழ்ச் செல்வன் ஆகியோர் கண்டன முழக்களை எழுப்ப பங்குபெற்ற கழக தோழர்கள் அனைவரும் ஒன்றிய அரசினை கண்டித்து முழக்கமிட்டனர்.
மாணவர் கழக மாநில துணை அமைப் பாளர் ம.ஓவியா நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்:
மாநில ப.க. ஊடக பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, மாநில ப.க. துணை தலைவர் கோபு.பழனிவேல், பெரியார் சமூகக்காப்பு அணி இயக்குநர் தே.பொய்யாமொழி, மாநில பெரியார் வீரவிளையாட்டு கழக செயலாளர் நா.இராமகிருஷ்ணன், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தர்த்தன், மாநில வீதி நாடக கலைகுழு அமைப்பாளர் பி.பெரியார்நேசன், மாநில மாணவர் கழக துணை செயலாளர் கவிபாரதி, மாவட்ட இணை செயலாளர் தி.வ.ஞானசிகாமணி, மாவட்ட விவசாயணி தலைவர் பாலசுப்ர மணியன், செயலாளர் பூவை இராமசாமி, மாவட்ட தொழிலாளரணி தலைவர் ச.சந்துரு, செயலாளர் ஏகாம்பரம், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் நா.சங்கர், செயலாளர் நா.காமராசு. மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ச.அழகிரி, செயலாளர் பாவலர் பொன்னரசு, தஞ்சை ஒன்றிய தலைவர் இரா.சேகர், செயலாளர் நெல்லுப்பட்டு இராமலிங்கம், உரத்தநாடு ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் கு.நேரு, உரத்தநாடு ஒன்றிய துணை தலைவர் இரா,துரைராசு, திருவோணம் ஒன்றிய கழக செயலாளர் சில்லத்தூர் சிற்றரசு, திருவை யாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன், செயலாளர் துரை.ஸ்டாலின், அம்மா பேட்டை ஒன்றிய தலைவர் கி.ஜவகர், செய லாளர் சே.காத்தையன், பூதலூர் ஒன்றிய தலைவர் அள்ளூர் இரா.பாலு, செயலாளர் புகழேந்தி, தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், செயலாளர் கரந்தை அ.டேவிட், உரத்தநாடு நகர தலைவர் பேபி.ரவிச்சந்திரன், துணை செயலாளர் க.மாரிமுத்து, உரத்தநாடு ஒன்றிய இளை ஞரணி தலைவர் நா.அன்பரசு, செயலாலர் சு,குமரவேல், அமைப்பாளர் வெ.நா.கிட்டு, தஞ்சை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் க.மணிகண்டன். செயலாளர் அ.இரமேஷ், உரத்தநாடு நகர இளைஞரணி செயலாளர் பேபி.ரெ.ரமெஷ், அமைப்பாளர் ச.பிரபா கரன், வல்லம் ம.அழகிரி, ஓட்டுநர் பா.ரவிச் சந்திரன், நெடுவாக்கோட்டை வெ.விமல், தெற்குநத்தம் கணேசன், ஆசைத்தம்பி, ஊரச்சி அ.திருநாவுக்கரசு, செண்பகபுரம் சாமி.தமிழ்செல்வன், நெய்வேலி தங்க. பாஸ்கர், கலைமணி, திருவையாறு கவுதமன், மு.விவேகவிரும்பி, சாலியமங்கலம் வை.இராஜேந்திரன், துரை.அண்ணாதுரை, துரை.சூரியமூர்த்தி, செதுராயங்குடிகாடு ராஜப்பன், தஞ்சை முகமது இக்பால், கரந்தை தனபால், வாண்டையார் இருப்பு இராமசாமி, திருவையாறு இரா.மதுரகவி, நெல்லுப்பட்டு சி.நாகராஜன், களிமேடு ர.அன்பழகன், ர.பாரதிதேவா, தஞ்சை வீரக்குமர், போட்டோ மூர்த்தி, தஞ்சை சாமி.கலைசெல்வன், கண்டியூர் பெரியார் அலி, தஞ்சை இராமையன், வளப்
பகுடி தங்கவேல், பெரும்புலியூர் தமிழரசன், ராயம் பேட்டை கவுதமன், தஞ்சை
விசிறி சாமியார் முருகன், சோ.முருகெசன், முல்லைகுடி துரைராஜ், ஒக்கனாடு கீழையூர் கலிய பெருமாள், தஞ்சை வெ.ரவிக்
குமார், மகளிரணி தோழர்கள் ஏ.பாக்கியம், வி.சுசிலா, திருவையாறு மலர்க்கொடி, மாணவர் கழக தோழர்கள்
ஜா.இரா.நிலவன், இரா.அறிவாளன், கிருஷ்னகிரி சுபாஷ் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட கழக தோழர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment