வங்கி மண்டல மேலாளரிடம் கழகத்துணைத் தலைவர் கோரிக்கை
வங்கித் தேர்வுகளில் தமிழ் புறக்கணிப்பை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நேற்று (24-5-2022) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கனரா வங்கி தஞ்சை மண்டல அலுவலகத்திற்கு நேரில் சென்று மண்டல மேலாளர் ஆனந்த்டட்டு அவர்களை சந்தித்து வங்கிப் பணியாளர் தேர்வில் தமிழில் தேர்ச்சி கட்டாயமில்லை என்பதை கண்டித்தும், தமிழை கட்டாயாமாக்க வலியுறுத்தியும் கோரிக்கை கடிதத்தை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வழங்கினார். உடன் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மண்டலத் தலைவர் மு.அய்யனார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரப்பாண்டியன், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி, மண்டல இளைஞரணி செயலாளர் வே.ராஜவேல், மாவட்ட துணைச்செயலாளர் அ.உத்திராபதி, மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் அ. டேவிட், நெடுவை வெ.விமல், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர்அதிரடி க.அன்பழகன், மாநில பக துணைத்தலைவர் கோபு.பழனிவேல், பாரதிதேவா, போட்டோ மூர்த்தி, கலைமணி மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளனர். (24.05.2022 தஞ்சை)

No comments:
Post a Comment