24ஆம் தேதி ஆர்ப்பாட்டம் ஏன் - ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 20, 2022

24ஆம் தேதி ஆர்ப்பாட்டம் ஏன் - ஏன்?

அருமை தோழர்களே!

வரும் 24ஆம் தேதி செவ்வாயன்று மாவட்ட தலைநகரங்களில் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஏன்  - ஏன்?

வங்கித் தேர்வுகளில் இனி தமிழுக்கு இடமில்லையாம். தமிழ்நாட்டு வங்கிகளில் ஏற்கெனவே இந்தி வாலாக்கள் வாலாட்டிக் கொண்டு இருப்பது போதாதென்று - இப்பொழுது முழுக்க முழுக்க இந்திவாலாக்கள்தான் ஆக்ரமிக்கப் போகிறார்கள். வாடிக்கையாளர்கள் பேசும் தமிழ் அவர்களுக்குப் புரியாது. வங்கிப் பணியாளர்கள்  பேசுவது வாடிக்கையாளர்களுக்குப் புரியாது. வேலை வாய்ப்பின்றி வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு இருக்கும் தமிழ்நாட்டு இளைஞர்கள் இளிச்சவாயர்களாக சோம்பிக் கிடக்க வேண்டியதுதான்.

ஏற்கெனவே உயர் ஜாதி பார்ப்பனர்களுக்குச் சட்ட விரோதமாக - பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்ற பெயரால் 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்று கூறிக் கொல்லைப்புறம் வழியாகப் புகுந்து விட்டனர்.

எடுத்துக்காட்டாக 2020இல் ஸ்டேட் பாங்க் எழுத்தர் தேர்வில் நடந்தது என்ன?

எஸ்.சி-க்குக் கட்ஆஃப் மார்க் 61.25, எஸ்.டி.க்குக் கட் ஆஃப் மார்க் 53.75, பிற்படுத்தப்பட்டோருக்கு 61.25, உயர் ஜாதி பார்ப்பனர்களுக்குக் கட் ஆஃப் எத்தனை தெரியுமா? 28.5. 

எஸ்.சி.யைவிட பாதிக்குப் பாதி குறைவான மார்க் வாங்கும் பார்ப்பனர்களின் வயிற்றில் வங்கிப் பணிகள் அறுத்துக் கட்டப்பட்டு விட்டன. இப்பொழுது தேர்வில் தமிழுக்கும் இடம் இல்லையெனில் தமிழின இளைஞர்களே உங்கள் நிலை என்ன? "தமிழில் படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைக்குக்கூட லாயக்காக மாட்டோம்" என்று 'துக்ளக்' எழுதியதை இந்த இடத்தில் நினைத்துப் பாருங்கள். ('துக்ளக்' 23.6.2010)

இது ஒரு கட்சிப் போராட்டமல்ல - அனைத்துக் கட்சிகள், அமைப்புகளின் இளைஞர்களைத் திரட்டுவீர்! இடி முழக்கம் செய்வீர்! தேவை! தேவை!! வங்கித் தேர்வுகளில் தமிழ்த் தேர்வு தேவை என்ற முழக்கம் விண்ணை முட்டட்டும்! முட்டட்டும்!!

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்


No comments:

Post a Comment