கா.அயோத்திதாச பண்டிதர் 177ஆவது பிறந்த நாள் - இன்று! தமிழ் வரலாற்றை புதிய நோக்கில் எழுதியவர் அயோத்திதாசர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 20, 2022

கா.அயோத்திதாச பண்டிதர் 177ஆவது பிறந்த நாள் - இன்று! தமிழ் வரலாற்றை புதிய நோக்கில் எழுதியவர் அயோத்திதாசர்!

1845-ஆம் ஆண்டு பிறந்து 

1914-ஆம் ஆண்டு வரை வாழ்ந்த அயோத்திதாசர், பகுத்தறிவுச் சிந்தனையாளர்களுள் ஒருவர்.  

1999-ஆம் ஆண்டில் அயோத்திதாசர் எழுத்துகள் தொகுத்து வெளியிடப்பட்டன. அதற்குப் பிறகே அவரின் பெயரும், சிந்தனைகளும் அதிகம் படிப்படியாகப் பரவின.

அயோத்திதாசர், சமூக அரசியல் மற்றுப் பண்பாட்டுரீதியிலும்  தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை எழுதினார். 

தமிழ் மரபில் பவுத்தம் தொடர் பானவைகளை ஆய்வுக் கண் ணோட்டத்தில் எழுதினார்.

ஓலைச் சுவடிகளைப் படிக்கத் தெரிந்திருந்த அவர், அவை அச்சுக்கு மாறியபோது நடந்த மாற்றங்களைக் கண்டு அச்சு இதழ்களை புதிய கோணத்தில் நடத்தினார். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சென்னையில் எழுச்சி பெற்ற பவுத்த மறுமலர்ச்சியின் முன் னோடிகளுள் ஒருவரானார்.

அயோத்திதாசர் 1907 முதல் 1914 வரை நடத்திய வார ஏட்டின் பெயர் `தமிழன்'. திராவிடன், தமிழன் போன்ற சொற்களை அரசியல் அடையாளங் களாகக் கையாண்ட முன்னோடிகளுள் ஒருவர். 

தமிழ்நாட்டில் இருந்த பவுத்தம் மற்றும் சமண சமயங்களால் தமிழ்க் கலாச்சாரம் அழிந்து போனது என்ற சைவ - வைணவ நூல்களின் கூற்றை அவர் மறுத்தார்.  

இருபதாம் நூற்றாண்டில் அறிமுக மான நவீன சமத்துவக் கருத்து களுக்கான இந்தியத் தொன்மையாகப் பவுத்தத்தை பல்வேறு சிந்தனை யாளர்களும் தலைவர்களும் புரிந் திருந்தனர். தந்தை பெரியார், கோசாம்பி, சிங்காரவேலர், ராகுலசாங் கிருத்தியாயன் ஆகியோர் பவுத்தம் குறித்த சாதகமான பார்வைகளைப் பகிர்ந்து வந்தனர். தமிழ் இதழியல் துறையில் அயோத்திதாசரின் பங்கு குறித்து இன்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment