நீர்வளஆதாரங்களை கண்டறிய 1,000 தானியங்கி மழைமானிகள் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 23, 2022

நீர்வளஆதாரங்களை கண்டறிய 1,000 தானியங்கி மழைமானிகள் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு

சென்னை, மே 23- நீர்வள ஆதாரங்களை கண்டறி யும் வகையில் ரூ.25 கோடி யில், மாநிலம் முழுவதும் உள்ள பிர்காக்களில் 1,000 தானியங்கி மழை மானிகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழ் நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் 34 ஆறுகள், 17 ஆற்று வடி நிலங்கள், 127 உப விளை நிலங்களாக வகைப்படுத் தப்பட்டுள்ளன. மாநிலத் தின் சராசரி மழை 960 மி.மீ ஆகும். இதில், தென் மேற்கு பருவமழை மூலம் சராசரி 439 மி.மீட்டரும், வடகிழக்கு பருவமழை மூலம் சராசரி 440 மி.மீட் டர் மழை கிடக்கிறது.

இதன் மூலம், மாநிலத் தின் மொத்த நீர் மேற் பரப்பு நீர்வள ஆதாரம் 711 டிஎம்சி. பூமியின் மேற் பரப்பு நீர்வளத்தினை சேகரித்து, சேமித்து வைக்க தடுப்பணைகள், படுகை அணைகள், நிலத் தடி தடுப்புசுவர்கள், நீர் செறிவூட்டும் துளைகள் மற்றும் கசிவு நீர்க்குட் டைகள் போன்ற கட்ட மைப்புகள் ஏற்படுத்த நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, நீர் வள ஆதாரங்களின் பரப்பு, தரம் மேம்படுத்த வேண் டும் என்பதால், வெள்ளம் மற்றும் வடிநிலங்களின் நீர் ஆதாரங்களை மதிப் பிடும் வேளையை நீர்வளத் துறை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக, மேற்பரப்பு நீரின் தரவு சேகரிக்கும் அமைப்பை ஏற்படுத்த முடிவு செய்யப்படடுள் ளது. அதன்படி, மேற் பரப்பு நீர் பற்றிய நிகழ்வு நேர தரவுகளை சேகரிக்க, 1,000 தானியங்கி மழை மானிகள் அமைக்கப்படு கிறது. தேசிய நீரியல் திட்டத்தின் கீழ் ரூ.25 கோடி மதிப்பில் இந்த மழை மானிகள், மாநிலம் முழுவதும் 1,166 பிர்காக் களில் 1,000 பிர்காக்களில் ஏற்படுத்தப்படுகிறது. இது குறித்து நீர்வளத் துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா நீர்வளநிலவள ஆதார விவர குறிப்பு மய்ய தலைமை பொறியாளர் பிரபாகருக்கு எழுதி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மாநில பேரிடர் அபாய குறைப்பு முகமை நிதியை கொண்டு ரூ.25 கோடி மதிப்பில் 1,000 தானியங்கி மழைமானி கள் வைக்கப்படுகிறது. இந்த மழைமானிகள் மாநி லம் முழுவதும் பிர்கா அளவில் அமைக்கப்படுகி றது. இந்த மழைமாணி வழங்குவதற்காக பதிவு செய்யப்பட்ட நிறுவன தயாரிப்புகளை மட்டுமே பெற வேண்டும். தமிழ் நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை டெண் டர் வெளிப்படை தன்மை  சட்டம் 2000இன் கீழ் உள்ள நடைமுறைகளை பின்பற்றி தானியங்கி மழை மானிகளை கொள் முதல் செய்தல், நிறுவுதல் மற்றும் இயக்குதல் ஆகிய வற்றை மேற்கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது. இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment