சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சாதனை
சென்னை, மே 23- கடலூரை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் பாலாஜி (21). இவர் 10 வயது முதல் குத்துச் சண்டை விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் குத்துச் சண்டை போட்டியின் போது அடிபட்டதில், இவரது இடதுபக்க தோள்பட்டை இறங்கி யது. கையை சுழற்றி தோள்பட்டையை சரி செய்து கொண்ட அவர் போட்டியில் வெற்றி பெற்றார். இந்த நிலையில், தேசிய அளவிலான 2ஆவது போட்டியின் போது தோள்பட்டை மீண்டும் இறங்கியது. பின்னர், சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் விளையாட்டு காயங்க ளுக்கான துறையின் தோள்பட்டை சீரமைப்பு பிரிவில் அனுமதிக்கப்பட் டார்.
மருத்துவமனை இயக் குநர் விமலா, ஒருங்கி ணைப்பு அதிகாரி ஆனந்த் குமார் அறிவுறுத்தலின் படி மருத்துவப் பரிசோ தனை செய்ததில், அவரது தோள்பட்டை பந்து கிண்ண மூட்டு உடைந் தும், 2 ஜவ்வுகள் கிழிந்தும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, துறைத் தலைவர் ஜி.லியோனர்ட் பொன்ராஜ் தலைமையிலான குழுவினர் 3 சிறு துளைகள் மூலம் நவீன கருவிகளின் உதவியுடன் இரண்டரை மணி நேரம் அறுவை சிகிச்சை (Arthroscopic Bony Bankart Surgery) செய்து மூட்டு, ஜவ்வுகளை சரிசெய்துள் ளனர்.
இந்நிலையில், நல் வாழ் வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மருத்துவமனைக்கு வந்து, பாலாஜியிடம் நலம் விசாரித்து, சிகிச்சை அளித்த மருத்துவக் குழு வினரை பாராட்டினார். தோள்பட்டை சீரமைப்பு துறை நிபுணர் ஜி.லி யோனர்ட் பொன்ராஜ் கூறியதாவது: அறுவைசிகிச்சைக்கு பிறகு நல முடன் இருக்கிறார். இன் னும் 6 மாதத்தில் அவர் மீண்டும் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க லாம். மிக அரிதான இந்த அறுவை சிகிச்சை, தமிழ் நாட்டில் அரசு மருத்துவ மனையில் முதல் முறை யாக செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ள இந்த அறுவைசிகிச்சையை தனியார் மருத்துவமனை யில் செய்ய ரூ.5 லட்சம் வரை செலவாகும்.
விளையாட்டு வீரர் களுக்கு அடிபட்டால், எக்ஸ்ரேவில் ஒன்றும் பிரச்சினை இல்லை என தெரிந்தாலும், மருத்து வரை அணுக வேண்டும். தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். அப் போதுதான் தொடர்ந்து விளையாட்டு போட்டி களில் பங்கேற்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment