சென்னை, ஏப்.10 இணையப் பாதுகாப்பு தயாரிப்புகளுக்காக பன்னாட்டு விருது பெற்ற சென்னையைச் சேர்ந்த கே7 கம்ப்யூட்டிங் பிரைவேட் லிமிடெட் செர்ட்-இன் எனப்படும் இந்தியக் கணினி அவசர எதிர்வினைக் குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தப்படி இரண்டு நிறுவனங்களும் இணைந்து இணையப் பாதுகாப்பை வழங்கும். செர்ட்-இன் ஒன்றிய அரசின் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டு முயற்சி குறித்து, கே7 கம்ப்யூட்டிங் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. கேசவர்தனன் கூறுகையில், 100 சதவீதம் இந்தியாவில் உருவான நிறுவனம், இணைய வெளியில் இந்தியர்கள் டிஜிட்டல் ஆபத்துகள் இல்லாமல் வளர வேண்டும் என்பதில் எப்போதும் கவனம் செலுத்திவருகிறது. தேசியப் பாதுகாப்பு செயல் திட்டத்தில் இணையப் பாதுகாப்பும் முக்கியத்துவம் பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் அனைத்து கணினி பயனாளர்களைப் பாதுகாக்கும் செர்ட்-இன் முயற்சியுடன் நாங்களும் கைகோர்ப்பதில் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.
செர்ட்-இன் அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் சஞ்சய் பாஹ்ல் கூறுகையில், பாதுகாப்பான இணைய வெளியை உருவாக்குவதிலும் இந்தியக் குடிமக்களிடையே சைபர் தூய்மையை மேம்படுத்துவதிலும் சைபர் ஸ்வச்சதா கேந்திரா சிறப்பான பலன்களை எட்டியுள்ளது. இதற்காகக் குடிமக்களுக்குப் பாதுகாப்பான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உருவாக்க திறன்மிக்க தொழில் நிறுவனத்துடன் செர்ட்-இன் கூட்டு சேர்ந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment