போளூர், ஏப். 18- திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரில், சுயமரியாதைச் சுடரொளி வாயாடி சுப்பிரமணியம் பேரனும், மாவட்ட ப.க.செயலாளருமான ஓய்வுபெற்ற வட்டாட்சியர் சு.பன்னீர்செல்வம்- விஜயலட்சுமி இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா 6.4.2022 புதனன்று சுயமரியாதை மண விழாவாக போளூர் பழனி தலை மையில் வெகுசிறப்பாக நடை பெற்றது.
திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு மண விழாவை நடத்தி வைத்து வாழ்த் துரை வழங்கினார். கழக மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக் குரைஞர் சே.மெ.மதிவதினி,சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் என். பாண்டி, மாநில மகளிரணி அமைப் பாளர் ந.தேன்மொழி, மண்டல தலைவர் குடியாத்தம் வி.சட கோபன், மாநில தொழிலாளர் அணி செயலாளர் திருச்சி சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் புலவர் ஏழுமலை, செய லாளர் சி.மூர்த்தி, அமைப்பாளர் மு.காமராஜ், பொதுக்குழு உறுப் பினர் முனு.ஜானகிராமன், பெரியார் பெருந்தொண்டர் செங்கம் கு.பச் சையப்பன், கு.இராமன், மருத்துவர் பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஓகூர் சுந்தரமூர்த்தி, அண்ணா தாசன், வேலூர் மாவட்ட தலைவர் வி.இ.சிவக்குமார், வேலூர் மாநகர தலைவர் உ.விஸ்வநாதன், வேலூர் மாவட்ட மகளிரணித் தலைவர் கலைமணி, பெரியார் நேசன், இராம்குமார், சா.கிருட்டிணன், கோ.தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட ப.க. செயலாளர் சு.பன்னீர் செல்வம்--விஜயலட்சுமி இணையர் நன்றி கூறினர்.
மணவிழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் " பெண் ஏன் அடி மையானாள்?" நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மணவிழாவை யொட்டி போளூர் நகர் முழுதும் கழகக் கொடிகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. மணவிழா மண்டப நுழைவுவாயிலிலிருந்து கழகக் கொடித் தோரணம் கட்டியும், பெரியார் பொன்மொழிகள் பதா கைகள் கட்டியும் அலங்கரிக்கப்பட் டிருந்தது. முழுமய்யான இயக்க மணவிழாவாக நடந்ததை வருகை தந்தோரும், பொதுமக்களும் பாராட்டினர்.

No comments:
Post a Comment