முதுபெரும் பெரியார் தொண்டர் காரைக்குடி லெ.நாராயண சாமி மறைவு! அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கழக பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 18, 2022

முதுபெரும் பெரியார் தொண்டர் காரைக்குடி லெ.நாராயண சாமி மறைவு! அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கழக பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை

காரைக்குடி, ஏப். 18- முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், தந்தை பெரியார் காலத்தில் நகர கழக செயலாளராக இருந் தவருமான லெ.நாராயணசாமி (வயது 102) முதுமையின் காரணமாக பல ஆண்டுகள் உடல் நலன் குன்றி காரைக்குடி இல்லத்தில் இருந்தார். இவர் திடீரென கடந்த ஏப். 16 அன்று காலை மறைவுற்றார். தகவல் அறிந்த கழகத் தலைவர் ஆசிரி யர் இரங்கல் தெரிவித்ததுடன், அவரது மகன் இராஜேஷ் குமாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதலும் கூறினார்.

ஏப். 17இல் அவரது இல்லத் திற்குச் சென்று திமுக மாவட்ட செயலாளர்அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், திரா விட மாணவர் கழக செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார், மண்டல கழக தலைவர் சாமி திராவிடமணி, மாவட்ட தலை வர் .அரங்கசாமி, மாவட்ட செயலாளர் .கு.வைகறை, மேனாள் மண்டல தலைவர் சாமி சமதர்மம், மாவட்ட துணைச் செயலாளர் ..பழனிவேலு, கல்லல் ஒன்றிய கழக செயலா ளர் கொரட்டி பாலு, மாவட்ட .. செயலாளர் .செல்வரா சன், அய்..பி. பாலகிருஷ்ணன், .அய்.டி.யு.சி. மாநில துணைத் தலைவர் பி.எல். இராமச்சந்தி ரன், ஆகியோர் இறுதி மரி யாதை செலுத்தினர்.

துணைவியார் ஜெயராணி, மகன்கள் இராஜேஷ் குமார், தமிழரசன், அறிவானந்தன், இரமேசு, சுரேசு, மகள்கள் மணி மேகலை, சுந்தரி ஆகியோருக்கு ஆறுதலும் தெரிவித்தனர்.

மதியம் 1.30 மணிக்கு மண் டல தலைவர் சாமி திராவிட மணி  தலைமையில், மறைந்த பெரியார் பெருந்தொண்டர் நாராயணசாமியின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment