மதவாத பதற்றம் - பிரதமர் மவுனம் காப்பது அதிர்ச்சி அளிக்கிறது: எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 17, 2022

மதவாத பதற்றம் - பிரதமர் மவுனம் காப்பது அதிர்ச்சி அளிக்கிறது: எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டறிக்கை

புதுடில்லி, ஏப்.17  இந்தியாவில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணுவதற்கு மக்களிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை விடுத் துள்ளனர். காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தி, தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின், திரிணாமுல் காங். தலைவர் மம்தா உள்ளிட்ட 13 எதிர்க் கட்சித் தலை வர்கள் கூட்டறிக்கை விடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:

உணவு, உடை , நம்பிக்கை, விழாக்கால மொழியை பயன்படுத்தி ஒரு பிரிவினர் பிரச் சினையை தூண்டு கின்றனர்.  நாட் டின் பல மாநிலங்களில் அண்மையில் வெடித்த வகுப்பு வாத வன்முறையை கண்டிக்கிறோம். மத ரீதியாக பிரித் தாள மேற்கொள்ளப் படும் முயற்சிகளை முறியடித்து மக்கள் அமைதி காக்க வேண்டும்.

நாட்டில் வெறுப்பு பேச்சை தூண்டுபவர்கள் மீது எந்த நட வடிக்கையும் எடுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது. வகுப்புவாத வன் முறையில் ஈடுபடுவோருக்கு கடுமை யான தண்டனை வழங்க வேண்டும். வெறுப்பு கருத்துகள் குறித்த பிரத மரின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது. சமூக நல்லிணக்கத்தின் பிணைப்பு களை வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவதை மீண்டும் உறுதிப் படுத்துவோம் என்று கூறியுள்

ளனர்.

No comments:

Post a Comment