ஓராண்டுக்குள் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 17, 2022

ஓராண்டுக்குள் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, ஏப்.17 ஓராண்டுக்குள் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி தமிழ்நாடு அரசு சாதனை படைத்திருப்பதாக முதலமைச்சர் மு..ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஓராண்டிற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட் டத்தை முதலமைச்சர் மு..ஸ்டா லின் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உளுந் தூர்பேட்டையைச் சேர்ந்த கண் ணன் என்ற விவசாயிக்கு ஒரு லட்ச மாவது மின் இணைப்பு ஆணையை முதலமைச்சர் மு..ஸ்டாலின் வழங்கினார்.

தொடர்ந்து மின் இணைப்பு பெற்ற பல்வேறு மாவட்ட விவசாயிகளிடம் மு..ஸ்டாலின் கலந்துரை யாடினார். இதனையடுத்து நிகழ்ச்சி யில் பேசிய முதலமைச்சர் மின் சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியை, பாராட்டினார். உழவர்களுக்கு முன்னுரிமை தரும் அரசாக என்றும் திமுக அரசு செயல்படும் என்று தெரிவித்த அவர், ஓராண்டு முடிவதற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி தமிழ்நாடு அரசு சாதனை படைத்திருப்பதாக பெரு மிதம் தெரிவித்தார்.


No comments:

Post a Comment