நீட்தேர்வு எதிர்ப்பு - புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணத்தில்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 17, 2022

நீட்தேர்வு எதிர்ப்பு - புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணத்தில்...

குடந்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்  சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு - புதிய

தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு -

மாநில உரிமை மீட்பு - ஆகியவற்றிற்காக தமிழர் தலைவர் ஆசிரியர் 

அவர்கள் மேற்கொண்டுள்ள நாகர்கோயில் முதல் சென்னை வரை 21 நாள்கள் பரப்புரை பெரும் பயண விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் 15-04-2022  அன்று மாலை 6.00 மணியளவில் சுவாமிமலை கடைவீதியில் நடைபெற்றது.

 கழக பேச்சாளர்  பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். மாவட்ட, ஒன்றிய கழக தோழர்களும், பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.

குடந்தை ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு - புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்பு - ஆகியவற்றிற்காக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொண்டுள்ள நாகர்கோயில் முதல் சென்னை வரை 21 நாட்கள் பரப்புரை பெரும் பயண விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் 16-04-2022 அன்று  மாலை 6.00 மணியளவில் பட்டீசுவரம் கடை வீதியில் நடைபெற்றது. 

கழக பேச்சாளர்  முனைவர்

அதிரடி .அன்பழகன் சிறப்புரையாற்றினார்.

மாவட்ட, ஒன்றிய கழக தோழர்களும், பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.

No comments:

Post a Comment