அமைச்சர் ரோஜா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 24, 2022

அமைச்சர் ரோஜா

''எனது கணவர் இயக் குநர் ஆர்.கே.செல்வமணி, பெரியாரைப் படித்ததால்தான்  அவர் கொள்கைப்படி என் னுடன் துணை நின்றார். அதனால்தான் நான் அமைச்சரானேன்'' என்று ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா கூறியுள்ளார்.

அமைச்சரான பிறகு தனியார் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த அவர் கூறிய தாவது:

''நம் தாய்மொழியைக் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். உயர்கல்வி மற்றும் உலக அறிவு பெற வேண்டுமானால் ஆங்கிலம் கற்றுக்கொள்ளவேண்டும். தேவைப்படும் என்றால்  இந்தியைக் கற்றுக்கொள் ளலாம்; பிடிக்கவில்லை என்றால் வேண்டாம்.

வட மாநிலங்களில் இருந்து வருபவர்களை ''தமிழ்க் கற்றுக் கொண் டால்தான் வேலை தரு வேன்; தெலுங்கு கற்றுக் கொண்டால்தான் வேலை தருவேன்; இல்லையென்றால், கொடுக்கமாட்டேன்'' என்று நம் மாநில அரசுகள் கண்டிப்புடன் இருந்தால் தமிழ், தெலுங்கைக் கற் றுக்கொள்வார்கள். தமிழ்நாடு அரசு பணிகளுக்கானத் தேர்வுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது.

தாய் மொழியான தமிழ் படிக்கத் தெரியாது, எழுதத் தெரியாது. தெலுங்கு படிக்கத் தெரியாது, எழுதத் தெரியாது என்று பலர் இருக்கிறார்கள். நம் தாய்மொழி வர வில்லை என்றால்தான் அவமானப்படவேண்டும்.

எனது கணவர் பெரியார் கொள்கைகளைப் பின்பற்றி வருபவர். அத னால், பெண்கள் முன் னேற்றத்தில் அக்கறை கொண்டவர். ''பெண்கள் சமூகம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது; அவர்களை மதித்துத் துணை நின்றால், திறமையை நிரூபிப்பார்கள்.''  தந்தை பெரியாரின் இந்தக் கொள்கையில் எனது கணவர் எப்போதும் உறுதியாக இருப்பவர். அவர், பெரியார் கொள்கைகளைத் தீவிரமாக பின்பற்றியதால்தான் என் னால் அரசியலில் தொடர்ந்து இயங்க முடிந்தது. அமைச்சர் வரை சாதிக்க வைத்தது'' என்று கூறினார்.

தந்தை பெரியார் கொள்கை எங்கெங்கெல்லாம் ஊடுருவி இருக்கிறது - பரவி யிருக்கிறது - தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்ப தற்கு இந்த ஒரு சோறு பதம் போதுமானது.

அதிலும் குறிப்பாக பெண்ணுரிமை என்ற தளத் தில் தந்தை பெரியார் பதித்த கால் - மதக்கோட்பாடுகளால் ரத கஜ பதாதிகளையெல்லாம் தூள் தூளாக்கி வருகிறது என்பது வெள்ளிடை மலை.

இந்த விடயத்தில் ஆணாகப் பிறந்த தந்தை பெரியார், பெண்ணுரிமை பேணும் தாயாகத் திகழ்ந்தார்.

தந்தை பெரியாரின் ''பெண் ஏன் அடிமையா னாள்?'' என்ற நூல் இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களிலும் பாடத் திட்டத்தில் வைக்கப்படட்டும்!

-  மயிலாடன்


No comments:

Post a Comment