சென்னை, மார்ச் 31- அறிவுவழி காணொலி நிகழ்ச்சியின் 584-ஆவது நிகழ்ச்சி 27.03.2022 இரவு 8 மணிக்கு நடை பெற்றது. இந்த நிகழ்வுக்கு அறிவுவழி காணொலி இயக்கத்தின் தலைவர் பழ.சேரலாதன் தலைமை தாங்கி உரை யாற்றினார்.அரும்பாக்கம் தாமோதரன் ஒருங்கிணைத்தார். ’நேற்று, இன்று, நாளை‘ என்னும் தலைப்பில் ஓரங்க நாடகத்தை பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன் பலகுரலில் உரையாற்றி நடத்தினார்.
நேற்று நமது தமிழ்நாடு எப்படி இருந்தது,திராவிடத்தால் எப்படி முன்னேறியுள்ளது, நாளை எப்படி மாறவேண்டும் என்ற தனது விருப் பத்தை, தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், தமிழர் தலைவர் ஆசிரியர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று பல குரலில் பேசி ,ஓரங்க நாட கமாக நடத்தி அசத்தினார். அவர்கள் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை அவரவர் குரல்களில் நடித்துக் காட்டினார்.
முதல் ஓரங்க நாடகமாக ஒரு பார்ப்பனச் சிறுவன் தனது தாத்தாவை போடா வாடா என்றழைப்பதைக் கண்டு ஒரு பையன் கொதிக்கின்றான் . அந்தப் பையன் இன்று நீதி அரசர். அந்த அம்பி வழக்குரைஞர். அந்த அம்பி நீதி அரசரை மை லார்ட் என்ற ழைக்கின்றான். நாளை உச்சநீதிமன்ற நீதி அரசரிடம், அரசு வழக்குரைஞர். அம்பி ,இட ஒதுக்கீடு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு என்று கேட்பதாகவும், இது 5000 ஆண்டுகள் கொடுமை, நூறு ஆண்டுகளாகத்தான் இட ஒதுக்கீடு இருக்கிறது, ஜாதியைக் கடைப்பிடிப்பது, ஜாதி ஒரு குற்றம் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்துங்கள் இல்லையென்றால் இன்னும் 4900 ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு நீடிக்கும் என்று அரசிடம் நீதி அரசர் சொல்லச் சொல்கின்றார்.
ஒரு பெண் மருத்துவம் படிக்க விரும்புவதையும்,அந்தப் பெண்ணின் தந்தை பெண்ணுக்கு திருமணம் முடித்து வைக்க விரும்புவதையும், தந்தை பெரியாரிடம் தன் தந்தையோடு வந்த அந்தப்பெண், தந்தை பெரியாரிடம் படிக்க விரும்புவதைச் சொல்வதையும், தந்தை பெரியார் அந்தப்பெண்ணின் தந்தையிடம் பெண்ணை மருத்துவம் படிக்க வைக்கச் சொல்வதையும், அந்தப் பெண் மருத்துவம் படித்து, பெரிய அளவில் பட்டம், புகழ் பெறுவதையும், ஓரங்க நாடகமாக நடித்துக் காட்டினார். மருத்துவம் படித்த பெண் முதல் மாத ஊதியத்தை முழுவதுமாகக் கொண்டு வந்து கொடுத்தபோது,தந்தை பெரியார் அதனை மறுப்பதையும்,உங்கள் அம்மா விடம் கொடுங்கள். அடுத்த மாதம் சிறு தொகையை நன்கொடையாகக் கொடுத்தால் ஏற்றுக்கொள்கிறேன் என்று தந்தை பெரியார் குரலில் பேசினார்.
அறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியாரிடம் வந்து சேர்வதையும்,தந்தை பெரியார் அவர்கள் அறிஞர் அண் ணாவை மாடிக்கே வந்து பாராட்டுவ தையும், அறிஞர் அண்ணா-, தந்தை பெரியார் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்ச்சிகளை அண்ணாவின் குரலிலும் தந்தை பெரியார் குரலிலும் மாறி மாறி பேசிக்காட்டினார்.சுயமரியாதைத் திருமணச்சட்டம் பற்றி தந்தை பெரியாரும், ஆசிரியர் வீரமணி அவர்களும் உரையாடுவதையும், முதல் சுயமரியாதைத் திருமணம் முதல் இன்றுவரை நடந்த, நடக்கும் அனைத்து சுயமரியாதைத் திருமணங்களும் செல் லும் என்று சட்டம் போட்டிருப்பதை ஆசிரியர் சொன்னவுடன், அண்ணா வைப் பாராட்டி பெரியார் மகிழ்வதை நடித்துக்காட்டினார்.
கலைஞர் அவர்கள் புதுச்சேரியில் அடித்துப் போடப்படுவதையும், தந்தை பெரியார் அவர்கள் அவரைப் பார்த்து அவரது புண்ணுக்கு மருந்து இடுவதை யும், ’தீட்டாயிடுத்து ‘என்னும் கலை ஞரின் கட்டுரையை தந்தை பெரியார் பாராட்டுவதையும், கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது தந்தை பெரியார் மறைந்த நிலையில் அரசு மரியாதை செய்ததையும், அரசு அதிகாரி கள் தந்தை பெரியார் அவர்கள் எந்தப் பதவியிலும் இல்லை, அதனால் அவருக்கு அரசு மரியாதை தர இயலாது என்று சொன்னதையும், காந்தியார் எந்தப் பதவியில் இருந்தார், அவருக்கு எப்படி அரசு மரியாதை செலுத்தப்பட்டது, தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை செய்ததற்காக என் பதவி போனால் போகட்டும் என்று கரகரத்த குரலில் கலைஞர் சொன்னதை அப்படியே நடித்துக்காட்டினார். இன்று தளபதி மு.க.ஸ்டாலின் அவ கள் ‘ஆம், நான் திராவிடத்தின் வாரிசு, கலைஞரின் வாரிசு, பெரியார் கொள்கை யின் வாரிசு ‘என்று சொல்லி திராவிட மாடல் அடிப்படை யில் சிறப்பாக ஆட்சி புரிவதை நடித் துக்காட்டினார்.
ஆசிரியர் கி.வீரமணி அவர்களை ,தந்தை பெரியார் வரவழைத்து, விடுதலை இதழை நடத்த முடியாத நிலை இருப்ப தாகவும், மூட வேண்டு மென்று நினைப் பதாகவும்,நீங்கள் பொறுப்பு ஏற்பதாக இருந்தால் தொடர்ந்து நடத்தலாம் எனச் சொல்வதையும், ஆசிரியர் அவர்கள், விடுதலை ஆசிரியர் பொறுப்புக்கு ஊதி யம் வேண்டாம் எனச்சொல்லி முழு நேர ஆசிரியராக வருவதையும், அதைக் கண்டு தந்தை பெரியார் அவர்கள் அறிக்கை விடுவதையும், அன்னை மணியம்மையார் அவர்கள்,தந்தை பெரியார் அவர்கள், ஆசிரியர் அவர்களிடம் பாசம் காட்டு வதையும் நடித்துக்காட்டினார்.
நிறைவாக வந்த ஓரங்க நாடகமாக,அய்யா ஆசிரியர் வீரமணி அவர்கள் தனது 95ஆவது வயதில் ஆஸ்லோ நகரம் செல் வதையும், அங்கு அவருக்கு ‘நோபல் பரிசு ‘வழங்கப்படுவதையும், நோபல் பரிசினைப் பெற்ற அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ,தந்தை பெரியா ரின் கொள்கைக்கு,அவர்களது தொண் டர்கள் அனைவருக்கும் கிடைத்த நோபல் பரிசு இது என ஏற்புரை அளிப் பதாகவும் உரையாற்றுவதாக நடித்துக் காட்டினார். மதமற்ற உலகமே, அமைதி யான உலகம். அந்த அமைதியான உலகம் அமைய வழிவகுப்பது தந்தை பெரியாரின் கொள்கைகளே என்று உரையாற்றுவதாக ஓரங்க நாடகத்தை முடித்தார்.
சமாதானத்துக்கான நோபல் பரி சுக்கு முழுத் தகுதியுடையவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எனப் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர் முனைவர் வா.நேரு, மிக நிறைவான நிகழ்ச்சி எனத் திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் இன்பக்கனி, டாக்டர் மீனாம்பாள், மியான்மர் கலைச்செல்வம் கருணாநிதி, மும்பை கணேசன், சிகாகோ பேரா. சோம.வேலாயுதம் எனக் கலந்து கொண்ட பலரும் நிகழ்வைப் பாராட் டினர். ஒரு புதிய முயற்சியாக,சிறப்பான முயற்சியாக பங்கு பெற்ற அனைவரும் இந்த நிகழ்வைப் பாராட்டி மகிழ்ந்தனர்.

No comments:
Post a Comment