மயிலாடுதுறை மாவட்ட கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
மயிலாடுதுறை, மார்ச் 31- மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் ஆ.ச.குண சேகரன் தலைமையில் 29.3.2022 மாலை 5 மணியளவில் சீர்காழி யில் அடுத்தடுத்து நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் அனைவரையும் வர வேற்று கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.
மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் பகுத்தறிவா ளர் கழக தோழர்கள் உரையாற் றியதைத் தொடர்ந்து பகுத்தறி வாளர் கழக மாநில துணைத் தலைவர் புயல் குமார் கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
கழக பொதுச்செயலாளர் தனது உரையில், சமூக நீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முத லமைச்சர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெறுகின்ற அரசு திராவிட கொள்கைகளை பல்வேறு வகையிலும் நடை முறைப்படுத்திக் கொண்டிருப் பதை சிறப்பாக எடுத்துரைத்தார்.
தமிழர் தலைவர் அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கும் சீர் காழி பொதுக்கூட்டத்தை வெற் றிகரமாக நடத்தவும், பிரமாண்ட வரவேற்பளிக்கவும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். சீர்காழி ஒன்றிய செயலாளர் கடவாசல் செல்வம் நன்றி கூறி னார்.
மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன், துணைச்செய லாளர் அரங்க.நாகரத்தினம், மயிலாடுதுறை நகர தலைவர் சீனி.முத்து, துணைத்தலைவர் பூ.சி.காமராஜ், ஒன்றிய தலைவர் ஆர்.டி.வி.இளங்கோவன், சீர் காழி நகர தலைவர் க.சபாபதி, ஒன்றிய தலைவர் ச.சந்திரசேக ரன், குத்தாலம் ஒன்றிய தலைவர் சா.முருகையன், செயலாளர் கு.இளமாறன், நகர தலைவர் சா.ஜெகதீசன், கொள்ளிடம் ஒன்றிய தலைவர் பி.ஆர்.பாண் டியன், செயலாளர் பூ.பாண்டு ரங்கன், தஞ்சை டேவிட், இரா.பரசுராமன், செயலாளர் ப.பெரியார்செல்வம், முத்து. அன்பழகன், (தி.மு.க.) கடவாசல் கிளைக்கழக செயலாளர் அறி வழகன், (தி.மு.க.) சீர்காழி கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளர் என்.ஜீவராஜ், (தி.மு.க.) சீர்காழி கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் இராசாங்கம், தி.மு.க பிரமுகர் கமால், பகுத்தறிவாளர் கழக தோழர்கள் சட்டநாதன், வீர சேனன், ஆசிரியர் கலைச்செல் வன், சா.ஆனந்தன், ஆர்.எஸ். பன்னீர்தாசன், வீரமணி, ச.வெண் மணி அழகன், எஸ்.வளையாபதி, ஆர்.குமாரசாமி மற்றும் திரா விடர் கழக தோழர்கள், பகுத் தறிவாளர் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
இரங்கற் தீர்மானம் 1
மாநில திராவிடர் கழக விவ சாய தொழிலாளரணி செயலா ளர் இராயபுரம் கோபால், மாவட்ட துணைத்தலைவர் என்.தியாகராஜன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் பூ.பாண்டு ரங்கனின் துணைவியார் சரோ ஜினி ஆகியோரின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறது.
தீர்மானம் 2
சென்னை பெரியார் திடலில் 19.3.2022 அன்று தமிழர் தலை வர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்ட தீர் மானங்களை ஏற்று செயல்படுத் துவது என முடிவு செய்யப்படு கிறது.
தீர்மானம் 3
நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு ஆகிய முழக்கங்களை முன்னிறுத்தி ஏப்ரல் 3 நாகர்கோயிலில் தொடங்கி ஏப்ரல் 25 சென்னை வரை பரப்புரை பயணம் மேற் கொண்டு ஏப்ரல் 10ஆம் தேதி சீர்காழியில் சிறப்புரையாற்ற வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்க ளுக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மிகச் சிறப்பான வரவேற்பு அளிப்பது எனவும், பொதுக்கூட்டத்தை மாபெரும் எழுச்சியுடன் நடத்துவது என வும் முடிவு செய்யப்படுகிறது. மக்கள் மத்தியில் பெருமளவில் விளம்பரப்படுத்திடும் வகையில் சுவரெழுத்து, சுவரொட்டிகள், விளம்பரப் பதாகைகள், உள்ளுர் தொலைக்காட்சியில் விளம்பரம் உள்ளிட்ட அனைத்தையும் கழ கத் தோழர்கள் ஒன்றிணைந்து மிகச் சிறப்பாக செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 4
தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் அடங்கிய புத்தகங் களை உலக மக்கள் அறிந்திடும் வகையில் பல்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து பரப்பிட தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கி பெரியாரை உலகமயமாக்கிடும் சாதனையை படைத்துள்ள சமூக நீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மான்பு மிகு தளபதி மு.க,ஸ்டாலின் அவர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட கழகத்தின் சார்பில் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
பொதுக்கூட்டத்திற்கு நன்கொடை வழங்கியோர்
மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன் ரூ.5000
சீர்காழி நகர தலைவர் க.சபாபதி ரூ. 1000
சீர்காழி ப.க தலைவர் சட்டநாதன் ரூ. 1000
கொள்ளிடம் ஒன்றிய தலைவர் பி.ஆர்.பாண்டியன் ரூ. 200
கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் பூ.பாண்டுரங்கன் ரூ. 500
மாவட்ட துணைச்செயலாளர் அரங்க.நாகரத்தினம் அரை ஆண்டு விடுதலை சந்தா
மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட் டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள்:
நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு மரணமுற்ற அனிதா உட்பட்ட மாணவ கண்மணிகளுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித் துக் கொள்கிறது.
ஒன்றிய பாஜக அரசின் சமூக நீதிக்கு எதிரான மக்கள் விரோத போக்கை கண்டிப்பதுடன் அதை மக்கள் மத்தியில் பரப் புரை செய்வது என முடிவெடுக் கப்படுகிறது.
புதிய பொறுப்பாளர்கள்
மயிலாடுதுறை மாவட்டத் தில்
புதிதாக நியமிக்கப்பட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள்
மயிலாடுதுறை நகரம்
செயலாளர் க.அருள்தாஸ்
துணைத்தலைவர் பூ.சி.காமராஜ்
சீர்காழி ஒன்றியம்
தலைவர் கடவாசல் ச.சந்திரசேகரன்
கொள்ளிடம் ஒன்றியம்
தலைவர் ஆச்சாள்புரம் பி.ஆர்.பாண்டியன்
செயலாளர் பூ.பாண்டுரங்கன்
குத்தாலம் நகரம்
தலைவர் சா.ஜெகதீசன்
ஒன்றியம்
செயலாளர் கு.இளமாறன்
அமைப்பாளர் மா.பாலசுந்தரம்
சீர்காழி நகர பகுத்தறிவாளர் கழக
புதிய பொறுப்பாளர்கள்
தலைவர் சட்டநாதன்
செயலாளர் வீரசேனன்
அமைப்பாளர் என்.ஜீவராஜ்
துணைத்தலைவர் ஆசிரியர் மோ.கலைச்செல்வன்
துணைச்செயலாளர் ஆர்.எஸ்.பன்னீர்தாசன்


No comments:
Post a Comment