கரூர்: "நீட் தேர்வு எதிர்ப்பு" ,"புதிய கல்விக் கொள்கைஎதிர்ப்பு", "மாநில உரிமை மீட்பு" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 31, 2022

கரூர்: "நீட் தேர்வு எதிர்ப்பு" ,"புதிய கல்விக் கொள்கைஎதிர்ப்பு", "மாநில உரிமை மீட்பு"

பிரச்சார பயணப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடத்திட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

கரூர், மார்ச் 31- கரூர் வருகை தரும் தமிழர் தலைவரை வரவேற்று எழுச்சியுடன் "நீட் தேர்வு எதிர்ப்பு" ,"புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு" மாநில உரிமை மீட்பு '"பிரச்சார பயணம் பொதுக்கூட் டம் சிறப்பாக நடத்திட கலந்து ரையாடல் கூட்டத்தில் முடிவு

கரூர் வருகிற 19.-4.-2022 செவ்வாய்க்கிழமை அன்று "நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு, உள்ளிட்டவை களை வலியுறுத்தி நாகர்கோயில் முதல் சென்னை வரை நடை பெறும் பொதுக் கூட்டத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களை சிறப்பான முறையில் வரவேற்று பொதுக் கூட்டம் தொடர்

பான நிகழ்வுகள் சம்பந்தமாக 28.3.2022 திங்கட்கிழமை தோழர் குமார் டைலர் கடையில் கரூர் மாவட்ட கழக கலந்து ரையாடல் கூட்டத்தில் 

பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் மற்றும் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கீழ்கண்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன 

1) 19.3.2022அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலை வர் ஆசிரியர் வீரமணி அவர்க ளின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

2) நீட் தேர்வு எதிர்ப்பு புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை மீட்பு ஆகிய முழக்கங்களை முன்னிறுத்தி ஏப்ரல் 3.4.2022 அன்று நாகர் கோயில் தொடங்கி ஏப்ரல் 25 சென்னை வரை பரப்புரை பயணம் மேற்கொண்டு ஏப்ரல் 19 அன்று கரூர் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு மாவட்ட திரா விடர் கழகம் சார்பில் மாபெரும் வரவேற்பு அளிப்பது எனவும் ஏப்ரல் 19 தேதி கரூரில் நடை பெறும் எழுச்சிமிகு பொதுக் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது 

3) கரூரில் பொது கூட்டம் சம்பந்தமாகமக்கள் மத்தியில் கொண்டு செல்ல விளம்பரப் படுத்தும் வகையில் சுவரொட் டிகள் சுவரெழுத்து உள்ளூர் தொலைக்காட்சி விளம்பரம் பதாகைகள் நிதி வசூல் ஒலி பெருக்கி விளம்பரம் அனைத் தையும் கழகத் தோழர்கள் ஒன்றிணைந்து மிக சிறப்பாக செயல்படுத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

4) ஏப்ரல் மே மாதங்களில் ஒன்றியம் மற்றும் கிளைக் கழ கங்கள் கலந்துகொண்டு கலந் தாய்வுக் கூட்டங்கள் அமைப்பு களைப் புதுப்பித்தல் மாவட்டம் முழுவதும் தெருமுனை பிரச்சார கூட்டம் நடத்துவது ஒரு நாள் அல்லது இரண்டு நாள் சனி  

ஞாயிறு அன்று பெரியாரியல் பயிற்சி முகாம் நடத்த வாய்ப் புள்ள இடங்களில் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

5) தந்தை பெரியார் அவர் களை சிந்தனைகள் அடங்கிய புத்தகங்கள் உலகமக்கள் அறிந் திடும் வகையில் இந்திய உலக மொழிகளில் மொழி பெயர்த்து பரப்பி 5 கோடி நிதியை தமிழ் நாடு அரசு நிதிநிலை அறிக்கை யில் ஒதுக்கி பெரியார் உலக மயம் என்ற சாதனையை படைத் துள்ள சமூகநீதி சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி யும் பாராட்டுகளும் தெரிவித் துக் கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட தலைவர் ஆசிரியர் குமாரசாமி, மாவட்ட செயலாளர் காளி முத்து, கழக பொதுச் செயலாளர் தஞ்சை இரா ஜெயக்குமார், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு சண்முகம், மாவட்ட துணைச் செயலாளர் வே  ராஜு, மாவட்ட இளைஞரணி தலைவர் அலெக்ஸ் செயலாளர் பொதுக் குழு உறுப்பினர் ஜெகநாதன், மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் காந்திகிராமம் ராஜா இளைஞரணி தோழர் காந்திகிராமம் குமார் நைஸ் சபாபதி கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் இரா.பெருமாள், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அமைப்பாளர் விடுதலை, ராய னூர் அய்யப்பன், அரவக்குறிச்சி அறிவரசன், காலனி இரா.கிருஷ் ணன், உள்ளிட்ட கழக தோழர் கள் கலந்து கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் நன்றி உரை காந்திகிராமம் ராஜா நிகழ்த்தினார்.

No comments:

Post a Comment