புதிய பொறுப்பாளர்கள், பெரியார் உலகம் நிதியளித்து புரவலரிடம் வாழ்த்துப் பெற்றனர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 31, 2022

புதிய பொறுப்பாளர்கள், பெரியார் உலகம் நிதியளித்து புரவலரிடம் வாழ்த்துப் பெற்றனர்!

ஆவடி, மார்ச் 31- ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்திய கலந்து ரையாடல் கூட்டத்தில் மாவட்டத் தலைவர், செயலாளர், துணைத் தலைவர், துணைச் செய லாளர், அமைப்பாளர் ஆகிய பொறுப்புகளுக்கு முறையே த. ஜானகி ராமன், முருகேசன், சிவ. ரவிச்சந்திரன், கார்த்திக், சங்கர் ஆகியோர் பகுத் தறிவாளர் கழகத்தின் மாநிலத் துணைத் தலை வர் அ.தா. சண்முகசுந்தரத் தால்  தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

புதிய பொறுப்பாளர் கள் விரைவில் பகுத்தறி வாளர் கழகத்தின் புரவ லர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற வேண் டும் என்று முடிவு செய் யப்பட்டது. அதனடிப் படையில் 19.-03.-2022 சனிக்கிழமை காலையில் நடைபெற்ற தலைமை செயற்குழு நிகழ்வுக்கு முன்னதாக மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச் செல்வன் முன்னி லையில் புதிய பொறுப் பாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்களி டம் வாழ்த்துப் பெற்றனர். இச்சந்திப்பின் மகிழ்வாக மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் த. ஜானகிராமன் பெரியார் உலகம் வளர்ச்சி நிதியாக, தமிழர் தலைவரிடம் ரூ.5000 வழங்கினார். 

புதிய தோழர்கள், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வெங்கடேசன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர். முன்ன தாக புதிய பொறுப்பா ளர்கள் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

No comments:

Post a Comment