தொழில் வளர்ச்சி கழகத்தின் தொழில் முனைவோர்களின் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 30, 2022

தொழில் வளர்ச்சி கழகத்தின் தொழில் முனைவோர்களின் கூட்டம்

சென்னை, மார்ச் 30 -தொழில்துறை மேம்பாட்டிற்காக அசோசெம் ஏற்பாடு செய்த தொழில் தொடர்பு கூட்டத்தில்  தமிழ்நாடு, அசோசெம் இணை தலைவர் அபய சிறீமல் ஜெயின் தனது வரவேற்பு உரையில், அசோசெம் அமைப்பு இந்தியா முழுவதும் சாதகமான வணிகச் சூழலை உருவாக்குவதற்கும், வலுவான இந்தியாவை உருவாக்க இந்தியா தொழில் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக செயல்பட்டு வருகிறது. வங்காள மாநிலம் வாய்ப்புகள் உள்ள இடம் என்றார். 

ரவி அகர்வால், தலைவர், அசோசெம், கிழக்கு மண்டலம் மற்றும் தேசிய குழு உறுப்பினர் கூறுகையில் நவீன உள்கட்டமைப்பு, முற்போக்கான வணிகக் கொள்கைகளின் வெற்றிகரமான ஒருங்கிணைப்புடன் வழங்கும் முன்னணி மாநிலங்களில் ஒன்றான வங்காளம். இன்று மாநிலம் பொருளாதார சக்தியாக திகழ்கிறது.

 மேற்கு வங்கதொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் ராஜிவா சின்ஹா தனது உரையில், மாநிலத்தின் முதலீட்டாளர் நட்புக் கொள்கைகள், தயார் நிலையில் உள்ள உள்கட்டமைப்பு, மாநிலத் தொழில் பூங்காக்கள், மாநிலம் முழுவதும் உள்ள பெரிய சாலைப் பாதைகள் மற்றும் பிராந்தியத்தின் வலுவான விமான சேவை, சாலை மற்றும் நீர் இணைப்பு ஆகியவற்றை எடுத்துரைத்தார். கூட்டத்தில், 200 அசோசெம் தொழில் துறை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் மற்றும் மாநிலத்தில் தங்களை விரிவுபடுத்தும் ஆர்வமுள்ள உறுப்பினர்களுக்காக, சுமார் 20 பிரத்தியேக வணிக சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டன என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment