பழைய கார்கள் விற்பனை அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 30, 2022

பழைய கார்கள் விற்பனை அதிகரிப்பு

புதுடில்லி, மார்ச் 30- பழைய கார்கள் விற்பனை அதிகரித்து வருவதற்கு, விலை மலிவு மற்றும் எளிதாக கிடைக்கும் நிதி வசதி ஆகியவை, முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக, ‘கார்ஸ் 24’ நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், நடப்பு ஆண்டில், பழைய கார் வாங்குவதற்கான கடன் வசதியும் அதிகரிக்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.பழைய கார்களுக்கான, மின்னணு வர்த்தக தளமான கார்ஸ்24 நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ள தாவது: பழைய காரை வாங்கும் இளைஞர்களில் 76 சதவீதம் பேர், சராசரியாக 3.5 லட்சம் ரூபாய் அளவுக்கு வாகனக் கடன் வாங்குகின்றனர்.

துவக்கத்தில் பணம் ஏதும் செலுத்த தேவையில்லை என்ற வசதி காரணமாக, நடப்பு ஆண்டில், கடன் வழங்குவது மூன்று மடங்கு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது பெண்கள் கார் வாங்குவதும் அதிகரித்து வருகிறது.மிக எளிதான இணைய வழி அணுகல் வசதிகள், பழைய கார் விற்பனையை அதிகரிப்பதில், முக்கியப் பங்கு வகிக்கிறது. இவ்வாறு, கார்ஸ் 24 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment