நம் நாட்டு மக்கள் மற்ற நாட்டு மக்களைப் போன்று கல்வி அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என்றும், அறிவியல், ஆராய்ச்சி, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வளர்ந்த நாடுகளுக்கு இணையாக ஏற்றம் பெற வேண்டும் என்றும் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்ததின் விளை வாக, பாமர மக்களிடையே கல்வியின் அவசியத்தை - முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி அவர்களை கல்வி கற்கத் தூண்டினார் தந்தை பெரியார்.
நல்வாய்ப்பாக கல்வி வள்ளல் காம ராஜர் முதல் அமைச்சரான நிலையில், தந்தை பெரியாரும் பச்சைச் தமிழர் காமராஜரும் இணைந்து செயல்பட்ட தின் காரணமாக, தமிழ்நாட்டில் கல்வி நீரோடை வெள்ளம் போல் பாய்ந் தோடியது. சாலைகள் அனைத்தும் கல்விச் சோலையாக பூத்துக் குலுங்கின.
அதன் பயனாய், கிராமப்புற ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் கல்வி கற்க ஆர்வமுடன் முன்வந்தனர். பல்வேறு இன்னல்களை, இடர்பாடு களை, தடைகளைத் தகர்த்தெறிந்து தற்போது கல்வி - வேலைவாய்ப்பை எட்டிப் பிடித்துள்ளனர் என்பது தந்தை பெரியாரும் - கல்வி வள்ளல் காமராஜரும் செய்த மாபெரும் கல்விப் புரட்சியாகும்.
இந்நிலையில், தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒரே இடத்தில் அனைத்து நூல்களும் கிடைக்கும் வகையில் புத்தகப் பூங்கா அமைப்பதற்கான இடத்தை தமிழ்நாடு அரசு தேர்வு செய்து வழங்கும் என உறுதி அளித்துள்ளார் என்று நாளேடு களில் (16.03.2022) வெளிவந்த செய்தி தெவிட்டாத தேனாய் தேன் கரும்பாய் இனிக்கிறது.
இத்தகைய இனிய தகவல் புத்தக வாசிப்பை நேசிப்பவர்களிடையேயும், சுவாசிப்பவர்களிடையேயும் மிகுந்த வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தந்தை பெரியார் நமது இன மக்கள் மானமும் அறிவும் பெற்ற மக்களாக உலகில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக வாழ்நாள் முழுவதும் அரும்பாடு பட்டார். தந்தை பெரியாரின் தலை மகன் அறிஞர் அண்ணா அவர்கள் வீட்டிற்கு ஒரு நூலகம் இருக்க வேண்டும் என்று மக்களிடையே வலியுறுத்திக் கூறினார். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் புத்தகப் பூங்கா அமைக்க விரும்பினார்.
அவ்வகையில்; தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் உயரிய நோக்கத்திற்கு - தொலைநோக்குப் பார்வைக்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள புத்தகப் பூங்கா எனும் அறிவுச் சோலையில் சங்கமிக்க அனைத்துத் தரப்பு மக்க ளும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக் கின்றனர்.
புத்தகப் பூங்கா எனும் விதை ஆலமரமாய்த் தழைத்தோங்கி, அவை அறிவாயுதமாக பூத்துக் குலுங்கும் சூழலில், கடைகோடி மக்களும் பயன் பெறும் வகையில் அதனை மேலும் செம்மைபடுத்தி - விரிவுபடுத்தி நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை உள்ள மாணவர் மற்றும் இளைஞர் களிடையே கொண்டு சேர்ப்பதின் வாயிலாக, எதிர்கால இளைஞர் - மாணவர் சமுதாயம் நவீன அறிவியல் சிந்தனைகளும், பகுத்தறிவுச் சிந்தனை களும் கூடிய புதுமைகளை - புரட்சி களைப் படைக்கும் சமுதாயமாக, ஏற்ற மும் எழுச்சியும் பெற்ற சமுதாயமாக உருப்பெற்று எழும் என்பது உறுதி.
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!
- சீ. இலட்சுமிபதி, தாம்பரம்.

No comments:
Post a Comment