கரோனா: 4ஆம் அலை பற்றி அச்சப்படதேவையில்லை தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 23, 2022

கரோனா: 4ஆம் அலை பற்றி அச்சப்படதேவையில்லை தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, மார்ச் 23 - சென் னை ஜாபர்கான் பேட்டையில் புதிதாக கட்டப் பட்டுள்ள சென்னை தொடக்கப் பள்ளி கட்ட டத்தை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச் சர் மா.சுப்பிர மணியன் நேற்று (22.3.2022) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிர மணியன் அளித்த பேட்டி:  இந்த பள்ளி 10ஆம் வகுப்பில் 100% வெற்றியை கொடுத்த பள்ளி. இன்று ரூ.187 லட்சத்தில் 12 வகுப்பறைகள், கழிவறை யுடன் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.  சென்னை உள்ள 39 பள்ளிகளை மேம்படுத்தும் பணி, ரூ.126 கோடியில் இதன் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தமாக 12-14 வயதுடைவர்கள் 21.21 லட்சம் பேர் உள்ள நிலையில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 6,29,100 (29.66%) பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  அதேபோல, 15-18 வயதுடையவர்களில் 28.37 லட்சம் பேருக்கு (84.81%) தடுப்பூசி போடப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 4ஆம் அலை வருமா வராதா என்று தெரியவில்லை. ஆனால் தேவையான நடவடிக்கை அனைத்தையும் அரசு எடுத்து வருகிறது. 

தமிழ்நாட்டில் 22 மாவட்டத்தில் கரோனா பாதிப்பு பூஜ்யமாக உள்ளது. அதேபோல கடந்த 10 நாட்களாக இறப்பு எண்ணிக்கையும் பூஜ்யமாக உள்ளது. 

எனினும், அருகே இருக்கும் மாநிலங் கள், நாடுகளில் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது அதனால் பொதுமக்கள் விழிப்புணர் வுடன் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இன்னும் 51 லட்சம் பேர் தற்போது வரையும் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் இருக் கிறார்கள். அதே போல 1.32 கோடி பேர் 2ஆம் தவணை தடுப்பூசி போடாமல் இருக்கிறார்கள்.  

இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment