இந்திய துணை ராணுவப் படைகளில் ஒன்றான மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் (சி.அய்.எஸ்.எப்., ) கான்ஸ்டபிள் பதவியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: பீகார் 123, உத்தர பிரதேசம் 112, அசாம் 103, ஜார்க்கண்ட் 87, ஆந்திரா 79, மகாராட்டிரா 70, ஒடிசா 58, மேற்கு வங்கம் 54, தமிழகம் 41, ஜம்மு காஷ்மீர் 41 உட்பட மொத்தம் 1149 இடங்கள் உள்ளன. இதற்கு இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி : அறிவியல் பாடத்துடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
வயது: 4.3.2022 அடிப்படையில் 18 - 23 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
உயரம்: 170 செ.மீ., இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, மருத்துவ சோதனை தேர்வு , சான்றிதழ் சரிபார்ப்பு. இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 4.3.2022 மாலை 5:00 மணி.
விபரங்களுக்கு: www.cisfrectt.in
No comments:
Post a Comment