பாதுகாப்பு துறையில் பணியிடங்கள்
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிரான்சிட் கேம்ப்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம் : எம்.டி.எஸ்., 10, வாஷர்மேன் 3, மெஸ் வெயிட்டர் 6, மசால்சி 2, குக் 16, ஹவுஸ் கீப்பர் 2, பார்பர் 2 என மொத்தம் 41 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். தொடர்புடைய பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது : 18.2.2022 அடிப்படையில் 18-25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு ஆகிய முறைகளில் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : OC, 412 MC/MF Det, Hazrat Nizamuddin Railway Station - 110013 கடைசிநாள் : 18.2.2022
விபரங்களுக்கு : https://indianarmy.nic.in
No comments:
Post a Comment