பிற இதழிலிருந்து... திராவிடர் கழகத் தலைவர் பற்றி 'தினமணி கதிர்' 'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 15, 2022

பிற இதழிலிருந்து... திராவிடர் கழகத் தலைவர் பற்றி 'தினமணி கதிர்' 'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்!

கி.வைத்தியநாதன்

தினமணி கதிரில்’ ‘தினமணிஆசிரியர் திரு. கி.வைத்தியநாதன் ஒரு தொடரை எழுதி வருகிறார். அத்தொடரில் 13.2.2022 நாளிட்டதினமணி கதிரில்வட மாநிலத்தில் குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த அரசியல் நிலவரங்களைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகவே எழுதியுள்ளார்.

மண்டல் குழு அமலாக்கம் பற்றிய தீவிரமான செயல்பாடுகள் தலைதூக்கிய கால கட்டம்; அகில இந்திய அளவில் சமூகநீதி சக்திகளை ஒருங்கிணைக்க திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மிகப் பெரிய முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இதற்காகத் திராவிடர் கழக முயற்சியால் 42 மாநாடுகளும், 16 போராட்டங்களும் நடைபெற்றன. நாடாளுமன்றத்துக்கு முன்பும், பிரதமர் இல்லத்திற்கு முன்பும் கூட மறியல் போராட்டம் நடத்தப்பட்டதுண்டு. பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் (பி.பி.மண்டல்) அவர்களும் உறுப்பினர்களும் சென்னைப் பெரியார் திடலுக்கு வந்ததுண்டு. சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாங்கள் அளிக்கும் பரிந்துரைகளைச் செயல்படுத்தும் சக்தி பெரியார்பிறந்த மண்ணுக்குத்தான் உண்டு. இப்பொழுது திராவிடர் கழகத் தலைவர் வீரமணியின் கையில் அது இருக்கிறது என்றார்.

அக்கால கட்டத்தில் வட இந்திய தலைவர்களுடன் திராவிடர் கழகத் தலைவர் நெருக்கமாக இருந்து செயல்பட்டார்.

எதிரும் புதிருமாக இருந்த பல கட்சித் தலைவர்களை சமூகநீதி என்னும் புள்ளியில் ஒன்றிணைக்கும் மகத்தான பணியில் திராவிடர் கழகத் தலைவர் ஈடுபட்டார். ‘வீரமணியைப் பார்க்கும் பொழுதெல்லாம் சமூகநீதி உணர்வைப் பெறுகிறேன்?” என்று வி.பி.சிங் கூறும் அளவுக்கு அது இருந்தது. .பி.யிலும் அதன் பிரதிபலிப்பு இருந்தது.

தினமணிஆசிரியர் திரு. வைத்தியநாதன்தினமணி கதிரில்எழுதி வரும்பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்' என்னும் தொடரில் வடபுல அரசியலில் அந்தக் கால கட்டத்தில் திராவிடர் கழகத் தலைவரின் பங்களிப்பு எத்தகைய முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது என்பதை கடந்த பிப். 6 இதழிலும் பிப். 13 இதழிலும் விளக்கியுள்ளார். அந்தக் கட்டுரை இங்கே வெளியிடப்படுகிறது.


அம்பேத்ராஜன், கன்ஷிராம், கி.வீரமணி

"இப்போது நாம் ஒருவரைச் சந்திக்கப் போகிறோம். அவரை நீங்கள் டில்லியில் எதிர்பார்த்திருக்கவே முடியாது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி வியூகம் வகுப்பது அவர்தான்'' என்கிற பீடிகையுடன் ஓட்டு நரை கௌடில்யா மார்க்கிற்குப் போகும்படி சொன்னார் . நடராஜன். "தமிழ்நாடு இல்லத்துக்கு அவர் போகமாட்டாரே... பிறகு ஏன் கௌடில்யா மார்க்கிற்கு போகச் சொல்கிறார்...' என்கிற யோசனையில் நான் ஆழ்ந்தேன். தமிழ்நாடு இல்லத்தைத் தாண்டி, அதன் எதிர்வரிசையில் ஏனைய சில மாநிலங்களின் விருந்தினர் மாளிகைக்கு இடையில் அமைந்திருந்த ஒரு பங்களாவில் அந்தக் கார் நுழைந்தது. "ஸ்பிக் கெஸ்ட் ஹவுஸ்' என்கிற பெயர் பலகையிலிருந்து, அந்த நிறுவனத்தின் விருந்தினர் மாளிகை அது என்பது புரிந்தது. உள்ளே நுழைந்தோம். . நடராஜன் சொன்னது போலவே, அவரை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதற்கு முன்பு அவரை நான் நேரில் சந்தித்ததும் இல்லை. கொள்கைரீதியான முனைப்புடன் உத்தரப் பிரதேசத் தேர்தலில் கூட்டணி அமைவதற்காக, அவர் அங்கே வந்து தங்கியிருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை.1993 உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியை ஏற்படுத்தி, ஒரே நேரத்தில் காங்கிரசையும், பாஜகவையும் வீழ்த்திய அந்தத் தலைவர் அரசியல்வாதி அல்ல. அவரது பங்களிப்பு தேசிய அளவிலும் பேசப்படவில்லை; தமிழகத்தி லும் உணரப்படவில்லை. அதனால்தான் இங்கே அதைப் பதிவு செய்ய விரும்புகிறேன். (பிப். 6, 2022 - ‘தினமணி கதிர்‘)

அங்கே இருந்தவர் வேறு யாருமல்ல, ‘விடுதலை' ஆசிரி யரும், திராவிடர் கழகத் தலைவரு மான கி. வீரமணிதான். அதற்கு முன்பு அவரது பேச்சைக் கேட்டிருக்கிறேன், எழுத்தைப் படித்திருக்கிறேனே தவிர, நேருக்கு நேர் அருகில் பார்த்ததில்லை.

.நடராஜன் என்னை அவரிடம் அறிமுகப்படுத்திய போது, ‘சாவியில் இருந்தவர்தானே? என்று அவர் சட்டெ னக் கேட்டது என்னை ஆச்சரியப்பட வைத்தது. ‘சாவி' இதழில் நான் வேலை பார்த்தபோது, அவரைச் சந்தித்ததே இல்லை. அப்படி இருந்தும் அவர் என்னை அடையாளம் காண்கிறார் என்றால், எந்த அளவுக்கு அவர் எல்லோர் குறித்தும், எல்லா நிகழ்வுகள் குறித்தும்புரிதலுடன் இருக் கிறார் என்பது தெரிந்தது. தலைவர்களிடம் மட்டுமே காணப்படும் குணாதிசயம் அது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடிமைப்பணி அதிகாரி களாக இருந்து பணி ஓய்வுபெற்ற மூன்று நான்கு தமிழகத் தைச் சேர்ந்த அதிகாரிகள்விடுதலைஆசிரியர் கி. வீரமணி யுடன் இருந்தனர். சில உத்தரப் பிரதேச அரசியல்வாதிகளும்.

நான் ஓர் ஓரமாக சென்று அமர்ந்துவிட்டேன். ‘விடுதலை' ஆசிரியர் வீரமணியும், .நடராஜனும்தான் தீவிரமான ஆலோசனையிலும் விவாதத்திலும் இருந்தனர். என்னை அவர்கள் வெளியே போகச் சொல்லாததிலி ருந்து, அவர்கள் பேசுவதை நான் கேட்டால் தவறில்லை என்று கருதுகிறார்கள் என்ப தைப் புரிந்து கொண்டேன். என்னைப் பற்றி . நட ராஜன் என்ன சொல்லியிருந்தார் என்பது எனக்குத் தெரியாது. ‘வி.பி.சிங்கின் ஜனதா தளம், முலாயம் சிங் யாதவின் சமாஜவாதி கட்சி, கன்ஷிராமின் பகுஜன் சமாஜ் கட்சி மூன்றையும் ஓரணியில் இணைப்பது என்பதுதான் விடுதலை ஆசிரியர் கி. வீரமணியின் திட்டமாக இருந் தது. அதற்காகத்தான் அவர் டில்லியில் தங்கி இருந்து செயல் பட்டுக் கொண்டிருந்தார். இப்போது முன்மொழியப்படும் சமூக நீதிக் கூட்டணிக்கான முதல் முயற்சி 1993-இல் தி.. தலைவர் வீரமணியால் முன்னெடுக்கப் பட்டது என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது.

வி.பி.சிங், கன்ஷிராம் இருவருமேவிடுதலை' ஆசிரியர் வீரமணியிடம் அதீத மரியாதை வைத்திருந்தனர். கன்ஷி ராம் அவரை ராஜகுருவாகவே கருதினார் என்றுதான் சொல்ல வேண்டும். அது வரை வடநாட்டு தலித் அமைப்பு கள் பெரியாரை அங்கீகரித்ததில்லை. அவர் குறித்துப் பரவலாக தெரியாது. விடுதலை ஆசிரியர் வீரமணியுடனான உறவின் காரணமாகத்தான், அம்பேத்கருக்கு நிகரான முக்கி யத்துவத்தைப் பெரியார் .வெ.ராவுக்கும் பகுஜன் சமாஜ் கட்சி தரத் தொடங்கியது. இப் போது வரை அது தொடர்கிறது.

பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளைத் தவிர, ஏனைய கட்சிகளை எல்லாம் ஓரணியில் திரட்டி மும்முனைப் போட்டியை ஏற்படுத்தினால்தான், பெரும்பான்மை பலத் துடன் ஆட்சி அமைக்க முடியும். இல்லா விட்டால், பாஜகவோ, காங்கிரஸோ ஏதாவது ஒரு கட்சியைத் தேர்த லுக்குப் பிறகு இழுத்துக் கொண்டு ஆட்சி அமைத்துவிடும்" இதுதான்விடுதலைஆசிரியர் கி. வீரமணியின் கருத்து என்று . நடராஜன் என்னிடம் தெரிவித்தார்.

ஒருபுறம், ‘விடுதலைஆசிரியர் வீரமணி எல்லா கட்சி களையும் ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடு பட்டிருந்தார் என்றால், இன்னொருபுறம் முலாயம் சிங், ஜனதா தளத்தைப் பலவீனப்படுத்துவதில் குறி யாக இருந்தார். ஏற்கெனவே ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து ஜனதா தளம் (அஜீத் சிங்) என்கிற பெயரில் இயங்கி வந்த அஜித் சிங்கை சந்திக்கச் சென்றேன்.

முலாயம் சிங்கை இவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார் கள். அவர் எனது தந்தை சரண்சிங்கின் சீடர் என்பதால், ஆரம்பத்தில் இருந்தே அவரை எனக்குத் தெரியும். காங்கிர ஸின் வாக்கு வங்கியை ஏனைய கட்சிகள் பிரித்துக்கொண்டு விட்டதால், காங்கிரஸ் முலாயமுக்கு ஒரு பொருட்டே அல்ல. பாஜகதான் அவரது எதிரி. வி.பி.சிங், நான், கன்ஷிராம் போன் றோர் இருப்பது அவருக்கு இடைஞ்சலாகத் தெரி கிறது. தனது வாக்கு வங்கிக்குப் போட்டியாக இல்லாத கன்ஷிராமை வேண்டுமானால் அவர் ஏற்றுக் கொள்வார். எங்களைப் பக்கத்தில் சேர்த்துக் கொள்ளவே மாட்டார்” - இது அஜீத் சிங் என்னிடம் சொன்னது.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, டில்லியில் இருப்பது குறித்தும், அவர் உத்தரப் பிரதேசத்தில் சமூகநீதிக் கூட்டணி ஒன்றை உருவாக்க முயற்சிப்பது குறித்தும் அவரிடம் சொன்னேன்.

"அதில் இணைந்து கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால், அவர்கள் என்னைச் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஜாட்டுகளை முற்பட்ட இனத்தவரும் தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்வதில்லை. பிற்படுத்தப் பட்டவர்களும் சேர்த்துக் கொள்வதில்லை. கன்ஷிராம் கட்சியினருக்கும் நாங்கள் தீண்டத்தகாதவர்கள். குறிப்பாக, என்னை வி.பி. சிங்கும், முலாயம் சிங்கும் அகற்றி நிறுத்தி அழிக்கத்தான் விரும்புவார்கள். வேறு வழியில்லா விட்டால், நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம். அது பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள்..." என்று சொன்னார் அஜீத் சிங்.

அமர்சிங் மூலம் இந்தத் தகவலை முலாயம்சிங்கிற்குத் தெரிவித்தேன். எனக்குக் கிடைத்த பதில் என்ன தெரியுமா? “அஜீத் சிங், அவரையும், அவர் கட்சியையும் பற்றிக் கவ லைப்படட்டும். எங்களை பற்றிக் கவலைப்பட வேண்டாம்!”

1991-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்ருந்தது. காங்கி ரஸ் 46 இடங்களிலும், ஜனதா தளம் 92 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. ஜனதா தளத்திலிருந்து பிரிந்து, சந்திரசேகரின் சமாஜவாதி ஜனதா கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட முலாயம் சிங் யாதவின் சமாஜவாதி கட்சி 34 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 12 இடங்களில் வென்றிருந்தன.

முலாயம் சிங் மீண்டும் இணைந்தால் பிற்படுத்தப்பட்ட சமூகமும், சிறுபான்மை சமூகமும் முழு ஆதரவைத் தரக்கூடும் என்பது வி.பி.சிங்கின் 1993 தேர் தல் எதிர்பார்ப்பு. பலவீனமாகிவிட்ட காங்கிரஸ் வாக்குகளும் தங்களுக்குத் கிடைத்தால் 200 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கலாம் என்று அவர் வெளிப்படையா கவே தெரிவித்தார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள முலாயம் சிங் தயாராக இல்லை .

முலாயம் சிங், வி.பி.சிங்கை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்றால், கன்ஷிராமும் வி.பி. சிங்கை ஏற்றுக் கொள் ளத் தயாராக இல்லை . தனது முயற்சிகள் ஆடு, புலி, புல்லுக் கட்டு பிரச்சினையாக இருப்பதை உணர்ந்ததாலோ என்னவோ, தி.. தலைவர் வீரமணி தனது அடுத்தகட்ட முயற்சியில் இறங் கினார் என்று தோன்றுகிறது. அப்போது அவர் வகுத்த வியூ கங்கள் என்னென்ன என்ப தெல்லாம் குறித்துவிடுதலைஆசிரியர்தான் விளக்க வேண்டும். எனக்குத் தெரியாது.

வி.பி. சிங்குடன் இணையாமல் இருப்பதற்கு முலாயம் சிங்கிற்கு ஒரு காரணம் உண்டு. சிறுபான்மை முஸ்லிம்களின் ஆதரவாளர்கள் ஓரணியில் திரள்கிறார்கள் என்கிற சந்தேகம் ஏற்பட்டால், ஹிந்துக்கள் ஓரணியில் பாஜக பின்னால் அணி திரண்டு விடுவார்கள். அதே நேரத்தில் வெற்றி வாய்ப்பு தனக்குத்தான் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தினால், பாஜகவைத் தோற்கடிப்பதற்காக முஸ்லிம்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று கணக்குப் போட்டுக்காயை நகர்த்துகிறார் முலாயம்" என்று எனக்குப் பொறுமையாக விளக்கினார் முன்னாள் பிரதமர் சந்திர சேகர்ஜியின் உதவியாளர் யாதவ். அதுதான் நடந்தது.

இன்னொரு பக்கம், ‘விடுதலைஆசிரியர் வீரமணி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கன்ஷிராமின் முழு நம்பிக்கையைப் பெற்றவராக இருந்தார். இரண்டு பேரும் சேர்ந்துதான் தேர்தல் வியூகங்களை வகுத்தனர் என்றுகூட நான் நினைக்கிறேன். அந்த சந்திப்புகளில் . நடராஜனுக்குப் பங்கு இருந்ததாகத் தெரியவில்லை .

பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராமைப் பற்றிக் கூறும்போது அம் பேத்ராஜனைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியாது. கன்ஷிராமின் நிழல் என்றேகூட அவரைச் சொல்லலாம். கன்ஷிராமுக்கும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கும் இடையே பாலமாகவும், அவர்களது கருத்துப் பரிமாற்றங்களுக் குத் துணையாகவும் அந்தக் காலகட்டத்தில் இருந்தவர் அம்பேத்ராஜன்தான்.

கன்ஷிராம் உடல் நலமில்லாமல் சிகிச்சைக்கு சென் னைக்கு வந்தபோது, தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான அம்பேத்ராஜனைத் தன்னருகில் வைத்துக் கொண்டார். கன்ஷிராமின் கடைசிக் காலம் வரை அவரைவிட்டுப் பிரியாமல் இருந்த அம் பேத்ராஜன், அவரது மறைவுக்குப் பிறகுபெஹன்ஜி' என்று அழைக்கப்படும் மாயா வதிக்கும் உதவியாளராகவும், தனிச்செயலாளராகவும், கட்சியின் செயலாளராகவும் தொடர்ந்தார்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த அம்பேத்ராஜன் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆரம்பம் முதல் அதன் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள் ஏராளம் என்பது அனைவருக்கும் தெரி யும். மாயாவதி அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கியது. அந்தக் கட்சியில் பல ருக்கும் எதிர்பாராத அதிர்ச்சி, தமிழர் ஒருவர் உத்தரப் பிரதேச அரசியலில் முதன்மை பெறுவதும், மாயாவதியின் நம்பிக்கைக்குரியவராகத் தொடர்வதும் பலருக்குப் பொறாமையை ஏற்படுத்தியதில் வியப்பென்ன இருக்கிறது?

இப்போது அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இல்லை என்பது மாயாவதியின் கெட்ட வாய்ப்பே!. கட்சியில் இருந்த அவரது வடநாட்டு எதிரிகள் வெற்றியடைந்தனர்.

அது இருக்கட்டும். கூட்டணி முடிவுக்கு விடுதலை ஆசிரியரும், கன்ஷிராமும் முன்னெடுத்த முயற்சி காரணமா, இல்லை முலாயம் சிங் யாதவின் ராஜதந்திரக் கணக்கு காரணமா என்பது குறித்த விவாதம் தேவையற்றது. சமாஜவாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைப்பது என்று முடிவெடுத்தபோதே, 1993 உத்தரப் பிரதேசத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

முலாயம் சிங் யாதவின் பின்னால் ஏறத்தாழ ஒரு கோடி யாதவர்கள் ஆட்சி அதிகாரம் பெற்றுவிடுவோம் என்கிற நம்பிக்கையில் அணி திரண்டனர். அவர்களுடன் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவாளர்களான ஒன்றரை கோடி தலித்துக ளும் இணைகி றார்கள் எனும் போது, சிறுபான்மை முஸ்லிம் களின் 80% வாக்குகள் அந்தக் கூட்ட ணிக்கு உறுதியானது.

தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தது போல அமைய வில்லை. 422 உறுப்பினர்கள் கொண்ட அவையில் பாஜக 177 இடங்களை வென்றிருந்தது. தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை . 109 இடங்களில் சமாஜ்வாதி கட்சியும், 67 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியும் வெற்றி பெற்று, அந்தக் கூட்டணி 176 இடங்களுடன் பாஜகவுக்கு அடுத்தபடியாக வந்திருந்தது. 28 இடங்களுடன் காங்கிரஸும், 27 இடங் களுடன் ஜனதா தளமும் வேறு வழியில்லாமல் முலாயம் சிங்கின் கூட்டணியை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டன.

கூட்டணியை ஏற்படுத்திக் கொடுத்ததில்விடுதலைஆசிரியரின் பங்கு கணிசமானது. அதேபோல, பகுஜன் சமாஜ் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தியதில் ஜெய லலிதாவின் பங்கு இருந்ததாகச் சொல்லப்பட்டது. ஏனைய அரசியல் கட்சி களைப்போல அல்லாமல், தேர்தலை எதிர்கொள்ளும் பணபலம் பகுஜன் சமாஜ் கட்சிக்கு எப்படி வந்தது என்கிற கேள்விக்கு ஒருவேளை அம்பேத்ராஜன் விடைதருவாரோ என்னவோ தெரியாது. 1993 சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பல வட நாட்டு மாநிலக் கட்சித்தலைவர்கள் .நடராஜனின் நட்பை நாடினார்கள் என்பது எனக்குத் தெரியும்.

அந்தத் தேர்தல் முடிவுகள் வி.பி. சிங்கின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தது என்றுதான் கூற வேண்டும். அதேபோல, பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் விரும் பியது போலவே, காங்கிரஸ் தலைவர் என்.டி. திவாரியின் அரசியல் வாழ்வுக்கும் முற்றுப்புள்ளி விழுந்தது.

1993-இல் தொடங்கி இன்றுவரை உத்தரப் பிரதேச அரசியல் பாஜக - சமாஜவாதி - பகுஜன் சமாஜ் கட்சிகளுக் கிடையேயான ஆட்சி அதிகாரப் போட்டியாகத்தான் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்கிறது. அதன் பின்னால் தமிழ் நாட்டின் பங்கு இருக்கிறது என்பதை எல்லோருமே மறந்து விட்டார்கள்.

நான் முன்பே சொன்னதுபோல, 1993 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்த லில் தமிழகத்தின் பங்கு தேசிய அளவில் கவனம் பெறவில்லை. தமிழ்நாட்டில் அது உணரப்படவில்லை . ‘விடுதலை ஆசிரியர் கி. வீரமணியும், கன்ஷிராமின் உதவியா ளராக இருந்த அம்பேத்ராஜனும், அந்த நாள் ஞாபகமாகப் பகிர்ந்துக் கொள்ள பல செய்திகள் உண்டு என்பது மட்டும் உறுதி.

- நன்றி: தினமணி கதிர்', 13.2.2022

No comments:

Post a Comment