புதுடில்லி, பிப்.22 தெருவோர குழந்தைகள் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காணாமல் இருப்பது ஏன்? என தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு நல ஆணையத் திற்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
கரோனா பாதிப்பால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகள் குறித்து தாமாக வழக்கு பதிவு செய்து விசாரித்த உச்ச நீதிமன்றம், தங்குவதற்கு இடமின்றி தெருச் சூழலில் வசிக்கும் குழந்தைகளை காலதாமதம் இல்லாமல் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங் களுக்கு கடந்த மாதம் 28ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு உச்ச நீதி மன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் நேற்று (21.2.2022) மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்கள் தரப் பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வாதாடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி நாகேஸ்வர ராவ், தெருக் குழந்தைகள் தொடர்பான விவகாரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை கள் தற்காலிகமானதாக இருக்கக் கூடாது. இதில் சிறிது நாட்கள் அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். பின்னர் மீண்டும் தெருவுக்கு வருகின்றனர். நாடு முழுவதும் சுமார் 15இல் இருந்து 20 லட்சம் வரையில் தெரு வோரக் குழந்தைகள் உள்ள னர். அதனால் இதற்கு உட னடியாக நிரந்தர தீர்வு காணாதது ஏன்?. இந்த விவகாரத்தில் அனைத்து மாநிலங்களையும் ஒன்றி ணைத்து ஒரு ஆலோசனை கூட்டத்தை ஏன் நடத்தக் கூடாது? என தேசிய குழந் தைகள் உரிமைகள் பாது காப்பு நல ஆணையத்திற்கு சரமாரி கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து ஒன்றி ணைந்த ஆலோசனை கூட் டத்தை நடத்துவதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு நல ஆணையம் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் நட் ராஜ் ஒப்புதல் வழங்கினார். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த விவகா ரத்தில் மாநில அரசின் செயல் பாடுகள், நடவடிக்கைகளை மாதம் ஒரு முறை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு நல ஆணையம் கண்காணிக்க வேண்டும். இதற்கு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த இடைப் பட்ட காலத்தில், தெருவோ ரக் குழந்தைகளின் மறுவாழ் வுக்காக மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள், அமல்படுத்திய திட்டங்கள் தொடர்பான நிலை அறிக் கையை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு நல ஆணையம் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி நான்கு வாரத்துக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.
No comments:
Post a Comment