செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 26, 2022

செய்தியும், சிந்தனையும்....!

சோதனைக் குழாய் கருத்துக்கருவுக்கு வயது 84!

*           44 ஆண்டுகளுக்கு முன் சோதனைக்குழாய் குழந்தை பிறந்தது. அக்குழந்தையின் பெயர் லூயிஸ் பிரவுன்.

>>           84 ஆண்டுகளுக்கு முன்பே (1938) சோதனைக் குழாய் குழந்தைப் பற்றிக் கூறியவர் தந்தை பெரியார்!

அரியணைகளைக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்?

*           மீண்டும் அரியணையில் ஏற ஜெயலலிதா பிறந்த நாளில் சபதம் ஏற்போம்!

- ஓபிஎஸ், இபிஎஸ்

>>           தொண்டர்களைத் தேற்ற வேண்டாமா?

பா..கவுக்கு முதல் பரிசு!

*           தமிழ்நாட்டை பா... ஆள முடியாது என்று ராகுல்காந்தி கூறியதற்கு பா... பதில்

>>           நடந்து முடிந்த தேர்தலில் டெபாசிட்டை அதிகம் இழந்த கட்சி என்பதில் முதல் பரிசு பா..கவுக்குத் தானே?

கையில் காசில்லாதவன் கடவுளானாலும் கதவைச் சாத்தடி!

*           திருப்பதியில் இலவச டிக்கெட் கிடைத்தும் ஏழுமலையானைத் தரிசிக்க முடியாமல் பக்தர்கள் தவிப்பு!

>>           ஏழுமலையானின் கருணை ஏழைகள் மீது இல்லை!

தொங்கப் போவுது!

*           .பி.யில் தொங்கு சட்டசபை ஏற்படுமா?

- கருத்துக் கணிப்பு

>>           ஆக பா... கயிற்றில் தொங்கும்!

கட்! கட்!! கட்!!!

*          கிராமப்புற மேம்பாட்டுக்கு நிதிப்பற்றாக்குறை கிடையாது!

- பிரதமர்

>>           ஆனால் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு மட்டும் நிதிகட்!”

வேறு கவலை இல்லையா?

*           ருசியா - உக்ரைன் இடையே போர்

>>           அணுயுகத்தில் உலக அழிவு - எச்சரிக்கை!

மக்களுக்கான அரசு (Welfare State)

*          மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 50 லட்சமாவது பயனாளிக்கு மருத்துவப் பெட்டகம் முதல் அமைச்சர் அளிப்பு

>>           எதிர்க்கட்சிகளுக்கோ மனநோய்!

குறை சொல்லா விட்டால் எப்படிப் பிழைப்பு?

*          மக்கள் பிரச்சினைக்கு இன்னும் நேருவைக் குறை கூறுவதா?

- மேனாள் பிரதமர் மன்மோகன் சிங்

>>           நேருவின் அழகில் மயங்கி பெண்கள் நேருவுக்கு - காங்கிரசுக்கு ஓட்டுப் போடுகிறார்கள் என்று ராஜாஜி கூறவில்லையா?

No comments:

Post a Comment