மூத்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன் எழுதிய “இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?” - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 26, 2022

மூத்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன் எழுதிய “இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?”

நூலை முதலமைச்சர் வெளியிட தமிழர் தலைவர் பெற்றுக் கொண்டார்

சென்னை, பிப். 26- மூத்த பத்திரிகை யாளர் .திருமாவேலன் எழுதியஇவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?” என்ற நூலை முதல மைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் வெளியிட தமிழர் தலைவர் ஆசிரி யர், பேராசிரியர் சுப.வீரபாண்டி யன் ஆகியோர் பெற்றுக் கொண் டனர்.

சென்னை அண்ணா அறிவால யம் கலைஞர் அரங்கில் நேற்று (25.2.2022) மாலை 6.30 மணிக்கு மூத்த பத்திரிகை யாளர், கலைஞர் செய்திகளின் முதன்மை ஆசிரியர் .திருமாவேலன் எழுதியஇவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?” என்ற இரண்டு தொகுதி கள் அடங்கிய நூல் வெளி யீட்டு விழா மிகுந்த சிறப்போடு நடை பெற்றது.

இயக்குநர் அமிர்தம், .திருமா வேல னின் தந்தை பெரும் புலவர் மு.படிக்க ராமு ஆகியோர் முன் னிலை வகிக்க, நற்றிணை பதிப்பகத் தின் உரி மையாளர் யுகன் வரவேற்புரையாற் றினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அவர்கள், “இவர் தமி ழர் இல்லை என்றால் எவர் தமி ழர்?” என்ற இரண்டு தொகுதிகள் அடங்கிய நூலை வெளியிட, திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் நூல் களைப் பெற்றுக் கொண்டர்.

முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் விழாப் பேருரையாற்றி னார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீர பாண்டி யன் நூல் அறிமுகவுரை யாற்றினார். நூலாசிரியர் .திருமாவேலன் ஏற் புரையாற்றினார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்த லில் தி.மு.. கூட்டணி வெற்றி வாகை சூடியதையொட்டி தி.மு.. தலைவர், முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர் களுக்குத் தமிழர் தலைவர்  பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரி வித்தார்.

முதலமைச்சர் மு..ஸ்டாலின், தமிழர் தலைவர் ஆசிரியர், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் இயக்குநர் அமிர் தம் ஆகியோருக்கு விழாக் குழுவினர் திருவள்ளுவர் சிலை வழங்கி சிறப்பு செய்தனர்.

விழாவில் நாடாளுமன்ற தி.மு.. குழுத் தலைவர் டி.ஆர். பாலு, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் .பொன் முடி, பொதுப் பணித்துறை அமைச்சர் ..வேலு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், ஆதி திரா விடர் நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ் உள்ளிட்ட அமைச் சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். அரங்கம் நிறைந்த மக்கள் விழாவாக நடைபெற்றது.

திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன், அமைப்புச் செயலா ளர் வி.பன்னீர்செல்வம், சு.கிருட் டிணன், ரேணுகா திருமாவேலன், ‘வளர் தொழில்ஆசிரியர் ஜெய கிருட்டிணன், பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன், மக்கள் தொடர்பு நிர்வாகி தினேஷ், திராவிட மாண வர் கழகத்தின் மாநில செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார், தென் சென்னை மாவட்டத் தலை வர் இரா.வில்வநாதன், சென்னை மண்டல இளைஞரணி அமைப்பா ளர் சோ.சுரேஷ், பாலு, விருதுநகர் மாவட் டத் தலைவர் இல.திருப்பதி, பொதுக் குழு உறுப்பினர் வழக்கு ரைஞர் மு.சென்னியப்பன், வழக்கு ரைஞர் துரை.அருண், கோவி.ராக வன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பொழிசை கண்ணன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், இளைஞரணித் தோழர்கள் மு.சண் முகப்பிரியன், .கலைமணி, சு.தமிழ்ச் செல்வன், தென் சென்னை மாவட்ட இளை ஞரணி செயலாளர் மணிதுரை ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment