சீன இளைஞர் கண்டுபிடித்த மிகப்பெரிய பவர்பேங்க் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 26, 2022

சீன இளைஞர் கண்டுபிடித்த மிகப்பெரிய பவர்பேங்க்

அலைபேசி நவீன திறன் பேசியாக உருமாறிய பிறகு விரைவாக அதன் பேட்டரி தீர்ந்து போவதால் அடிக்கடி சார்ஜ் போடும் நிலை ஏற்பட்டது. இதை சமாளிக்க பவர்பேங்க் என்ற மின்சேமிப்புக்கலம் உருவானது, நாம் பயன்படுத்தும் டார்ச் லைட் பேட்டரிகள் போன்றதுதான், ஆனால் நவீனமானது அதிக நேரம் மின்சேமித்து வைக்கும் ஆற்றல் கொண்டது. எளிமையானது, கொண்டு செல்ல வசதியானது, ஆனால் திறன்பேசியின் பயன்பாடு வரம்பு மீறிச்சென்று கொண்டு இருக்கிறது.   இந்த நிலையில் இதே போன்று வீட்டின் பயன்பாட்டிற்கு ஏன் செய்யக்கூடாது என்று சீனாவில் உள்ள தொழில் நுட்பம் தொடர்பான யுடியூப் சேனல் நடத்திக் கொண்டு இருக்கும் இளைஞரான ஹேண்டி ஹெங்க் என்பவர் சிந்தித்தார்.

 நிறையவீட்டில் பேட்டரிகள் இன்வெட்டர்கள் இருக்கின்றன. ஆனால் இவை இடத்தை அடைத்துக்கொண்டு பெரும் பொருட் செலவில் வாங்கப்படு பவைகளாகவும், அவ்வாறு பெறப்படும் மின்சாரம் மின்விளக்குகளுக்கும், சில வீட்டு உபயோகப்பொருட்களுக்கும் மட்டுமே பயன்படுகிறது,

அதுவும் சில மணி நேரங்கள் கூட தாக்குப்பிடிப்பதில்லை. இந்த நிலையில் வீட்டின் முக்கிய பயன்பாடுகளுக்கு என்று மின்சார சேமிப்புக் கலம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.  

இதனை கையாள்வதும் எளிது. இதற்கென வீட்டில் தனியாக ஒரு இடம் ஒதுக்கவேண்டியது தேவையில்லை, நமது சூட்கேஸ் வைக்கும் இடம் அல்லது அலமாரி என்று எங்குவேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

மின் இணைப்பை அதற்கு கொடுக்கவும் அதிலிருந்து மின்சாதனப் பொருட்களுக்கு மின்சாரத்தை எடுக்கவும் எளிதாக மாற்றியுள்ளார்.

இதன் மூலம் தொலைக்காட்சி, மின்விசிறி வீட்டு சமையல் உபயோகப்பொருட்கள் உள்ளிட்டவைகளைப் பயன்படுத்தலாம்.

இதை வணிக ரீதியாக இதுவரை பயன்படுத்தவில்லை என்று கூறிய ஹாண்டி கெங் தானே அதிக எண்ணிக்கையில் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்போவதாக கூறினார்.

No comments:

Post a Comment