இதோ கல்லா கட்ட கிளம்பிவிட்டார்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 26, 2022

இதோ கல்லா கட்ட கிளம்பிவிட்டார்கள்

 புதுடில்லி ஆனந்த பர்பத பகுதியில் உள்ள ஒரு கோவிலில் உக்ரைனில் போர் நிறுத்தம் வேண்டி அப்பகுதிமக்கள், பார்ப்பனர்களை அழைத்து ரஷ்ய அதிபர், உக்ரைன் அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் படங்களை வைத்து யாகம் செய்தனர். இப்படிச் செய்தால் அந்தத் தலைவர்கள் மனம் திருந்தி போரை நிறுத்தி விடுவார்களாம்.

 இதற்காக நெய், அரிசி, பழம், தேங்காய், உள்ளிட்ட பொருட்களை நிதி திரட்டி வாங்கி இந்த யாகத்தை நடத்துகின்றனராம்.   யாகம் செய்யும் பார்ப்பனர்கள் யாரும் தட்சணை வாங்காமல் செய்யமாட்டார்கள், ஆகை யால் உலகில் எது நடந்தாலும் தங்களுக்கு கல்லாகட்ட கிளம்பிவிடுவார்கள் 

No comments:

Post a Comment