மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடை வழங்கப்பட்டது-கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
தஞ்சை, பிப். 26- தஞ்சை மாநகர திராவிடர் கழக துணைத் தலைவர் பெரியார் பெருந் தொண்டர் ப.தேசிங்கு (வயது79) 25.2.2022 அன்று காலை உடல்நலக்குறை வால் மறைவுற்றார்.
மறைந்த தேசிங்கு தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கியில் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற வர், வங்கி ஊழியர் சங் கம், தஞ்சை திருக்குறள் பேரவை, திருவையாறு தமிழிசை மன்றம் போன் றவைகளில் பல ஆண்டு காலம் பொறுப்பாளராக வும், தஞ்சை காவேரி அன்னை கலை மன்றத் தில் நாடக நடிகராகவும், இயக்குநராகவும், நடுவ ராகவும் இருந்து பணி செய்தவர், பகுத்தறிவா ளர் கழகத்தில் நகரத் தலை வராகவும், மாவட்டத் தலைவராகவும் பொறுப் பேற்று செயல்பட்டவர். தஞ்சை மாநகர திரா விடர் கழக தலைவராக பொறுப்பேற்று செயல் பட்டவர். தஞ்சையில் நடைபெற்ற கழக மாநாடு களின் பொருளாளராக இருந்து வரவுசெலவு கணக்குகளை தெளிவாக ஒப்படைத்தவர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் இரங்கல்
தேசிங்கு மறைவுற்ற செய்தி அறிந்தவுடன் அவருடைய மூத்தமகன் பொய்யாமொழி அவர்க ளிடம் திராவிடர் கழகத் தலைவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், ஆறுத லையும் தெரிவித்தார். மறைந்த தேசிங்கு உட லுக்கு ஏராளமானோர் மாலை வைத்து மரி யாதைசெலுத்தினர்.
இரங்கல் கூட்டம்
மாலை 7 மணி தஞ்சை மாவட்ட திராவிடர் கழ கத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையில் இரங்கல் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாநில மாணவரணி அமைப்பா ளர் இரா.செந்தூரப் பாண்டியன், பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநில செயலாளர் நா.இராமகிருஷ்ணன், தஞ்சை காவிரி அன்னை கலைமன்ற அமைப்பா ளர் நாடகவேள் கலை மாமணி மா.வீ.முத்து, சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வம், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் கோபு.பழனிவேல், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மண்டல மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, மண்டல இளைஞரணி செயலாளர் நூலகர் வே. இராஜவேல், தீயணைப் புத்துறை நிலைய அலு வலர் அ.கார்த்திகேயன், தஞ்சை மாவட்ட செய லாளர் அ.அருணகிரி, தஞ்சை மண்டல செயலா ளர் க.குருசாமி, தஞ்சை மண்டல தலைவர் மு.அய் யனார், மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப் பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன், கிரானரி ரோட்டரி சங்கத்தின் சார்பில் மேனாள் உதவி ஆளுநர் ஆடிட்டர் கரு. ஜெயக்குமார், உதயச்சந் திரன், திராவிடர் கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், சமூக சேவகர் சிதம்பரம் ராமச்சந்திரன் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர்.
மறைந்த ப.தேசிங்கு அவர்களது உடலுக்கு தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா, தஞ்சை மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலா ளர் அ. உத்திராபதி, மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் கபிஸ்தலம் மோகன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் இரா. வெற்றிக்குமார், மாநில வீதி நாடக கலைக்குழு அமைப்பாளர் பி.பெரி யார்நேசன், மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் சடையார்கோ வில் வெ.நாராயணசாமி, கழக சொற்பொழிவாளர் கள் இராம.அன்பழகன், பூவை.புலிகேசி, மண்டல பகுத்தறிவு ஆசிரியர் அணி செயலாளர் சி.ரமேஷ், பகுத்தறிவு ஆசிரியரணி நீடாமங்கலம் கல்யாணசுந்தரம், தஞ்சை மாவட்ட தொழிலா ளரணி தலைவர் ச.சந்துரு, தஞ்சை மாவட்ட தொழி லாளரணி செயலாளர் செ.ஏகாம்பரம், தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் சூரக்கோட்டை இரா. சேகர், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இரா மலிங்கம், திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண் ணன், தஞ்சை மாநகர செயலாளர் கரந்தை அ. டேவிட், தஞ்சை மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் இர.மணிகண்டன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இர.மகேந் திரன், மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் ச.அஞ்சுகம், மகளிரணி அமைப்பாளர் ஏ.பாக்கி யம், பொதுக்குழு உறுப் பினர் நீடாமங்கலம் சிவ ஞானம், குடந்தை மாவட்ட மகளிரணி தலைவர் ஜெய மணி குமார், பகுத்தறிவா ளர் கழகம் பெரியார்கண் ணன், தஞ்சை மாநகர இளைஞரணி துணை தலை வர் அ.பெரியார்செல்வம், தெற்கு நத்தம் கிளைக் கழக இளைஞரணி தலை வர் சு.குமரவேல், போட்டோ மூர்த்தி, அம் மன்பேட்டை எம்.எஸ்.கலியபெருமாள் மற்றும் கழகத் தோழர்கள், உற வினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
உடற்கொடை
ப.தேசிங்கு அவர்க ளின் விருப்பப்படி அவரு டைய குடும்பத்தினர் பெரியார் சமூகப்பணி இயக்குநர், தண்டர் விளையாட்டு கழக நிறுவ னர் பொய்யாமொழி, கருணாநிதி, இளவரசி, ஹேமலதா, வெண்ணிலா, பழனியப்பன், பேரக் குழந்தைகள் பகுத்தறிவு, தமிழிசை, இலக்கியா, தென்றல், காவியா மற் றும் உறவினர்கள் சென்னை மதுரவாயலில் இயங்கிவ ரும் சிறீ லலிதாம்பிகை மருத்துவக் கல்லூரி மற் றும் ஆராய்ச்சி மய்யத் திற்கு தேசிங்கு அவர்க ளது உடலை மருத்துவம் பயிலும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக சிதம் பரம் சமூக சேவகர் ராமச் சந்திரன் மூலமாக உடற் கொடையாக வழங்கினர்.
No comments:
Post a Comment