தஞ்சை மாநகரத் துணைத் தலைவராக பணி ஓய்வுக்குப் பிறகு பொறுப்பேற்று, ஏற்ற பொறுப்புகள் எதுவானாலும் நாணயத் துடனும் நம்பிக்கைக்கு ஏற்றவருமாகக் கடமையாற்றிய மானமிகு ப.தேசிங்கு அவர்கள் (வயது 79) (சொந்தவூர் வடுவூர்) நேற்று (25.2.2022) தஞ்சையில் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி, மிகவும் துயரத்திற்குரிய சோகச் செய்தியாகும்.
தஞ்சையில் கழக மாநாடுகளின்போது பொருளாளர் பொறுப்பை ஏற்று நேர்மையாகக் கணக்கு வரவு செலவுடன் அளித்த பெருமைக்குரியவர்.
அவரது மறைவு அக்குடும்பத்திற்கு மட்டுமல்ல; நமது கழகக் குடும்பத்திற்கும் பெரும் இழப்பு.
அவரது விருப்பப்படி அவரது உடல் சென்னை மதுரவாயல் லலிதாம்பிகை மருத்துவக் கல்லூரிக்கு நேற்று இரவு உடற்கொடை வழங்கப்பட்டது - அவரது லட்சிய உணர்வுக்கு அடையாளமாகும்.
அவரது அருமை மகன் தே.பொய்யாமொழி அவர் களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்.
அவருக்கு நமது வீரவணக்கம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
26.2.2022
No comments:
Post a Comment