சாமியார் அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியம் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 27, 2022

சாமியார் அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியம் கைது

 சென்னை, பிப். 27 தேசிய பங்குச் சந்தையின் மேனாள் தலைமைஅதிகாரி ஆனந்த் சுப்பிரமணியம் சென்னையில் சிபிஅய் அதிகாரிகளால் கைது செய்யப் பட்ட தாக தகவல் வெளியாகி உள்ளது

என்.எஸ்.., எனப்படும் தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக  சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, இமயமலை சாமியார் ஒருவருடன் பங்குச் சந்தை நிலவரம் குறித்து பகிர்ந்துகொண்டதாகவும், அவரது ஆலோசனைப் படியே செயல் பட்டதும் தெரிய வந்துள்ளது. அந்த இமயமலை சாமியாரின்  பரிந்துரையின் பேரில் சென்னையை சேர்ந்த ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை  தேசிய பங்குச் சந்தையின்  ஆலோசகராக சித்ரா ராமகிருஷ்ணா நியமித்ததாக கூறப்படுகிறது.

2014 முதல் 2017 வரை தேசிய பங்குச் சந்தைத் தலைவராகப் பணியாற்றினார் ஆனந்த் சுப்பிரமணியன்.  சித்ரா மற்றும் ஆனந்த் ஆகியோர் இணைந்து தேசிய பங்குச் சந்தையில், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. ஆனந்த் சுப்பிரமணியம் மூலம் இமயமலை சாமியார் ஆதாயம் அடைந்து வந்ததாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக  'செபி' பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஅய் விசாரணை நடத்தி வருகிறது. சித்ரா ராமகிருஷ்ணா விடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக ஆனந்த் சுப்பிரமணியத்திடமும் விசா ரணை நடைபெற்றது.

இதையடுத்து சென்னையில் ஆனந்த் சுப்பிரமணியனை சி.பி.அய். அதி காரிகள் கைது செய்தனர்.

பெண் அதிகாரி சித்ரா ராம கிருஷ்ணா தனக்கு யார் என்றே தெரியாத சாமியாருக்கு அனுப்பிய மின்னஞ்சல்கள் எல்லாம் இவரிடமே சென் றுள்ளது, இதன் மூலம் இவரே சாமியார் வேடத்தில் ஏமாற்றிஉள்ளார் என்று தெரியவந்துள்ளது, விசார ணையில் உண்மை வெளிவருமா  என்பது இனி மேல் தான் தெரியவரும்.

No comments:

Post a Comment