கடலூர் மண்டல மகளிரணி செயலாளர் ரமாபிரபா ஜோசப் பெண் ஏன் அடிமையானள் நூலினை வடலுரை சுற்றியுள்ள கிராமங்களில் இல்லந்தோறும் ஒவ்வொரு பகுதியாக பெண்களிடம் சென்று தந்தை பெரியார் கருத்துகளையும், பிரச்சாரங்களையும் எடுத்துச்கூறி இந்நூலை சேர்த்து வருகிறார். 2000-ஆவது நூலினை பெண்களிடம் வழங்கினார்.
சந்தா வழங்கல்
ஈரோடு மாவட்டம், ஈரோடு மாநகராட்சி சூரம்பட்டி காமராசர் சாலையில் வசிக்கும் தோழர் கனிமொழி நடராசன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் தருமன் வீரமணி முன்னிலையில் “விடுதலை” “திமாடர்ன் ரேசனலிஸ்ட்” மற்றும் பகுத்தறிறிவு போராளி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள் மலர் ஆகிய வற்றிற்கு ஆண்டு சந்தா ரூ.2300/-அய் வழங்கி பகுத்தறிவாளர் கழகத்தில் இணைந்தார் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறேன். நன்றி - தோழமையுடன் : தருமன் வீரமணி , மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்.
No comments:
Post a Comment