நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு..! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 1, 2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

சென்னை, பிப்.1 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தி.மு. முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலுக் கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வருகிற பிப்ரவரி 4ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

தி.மு.. கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ னிஸ்ட், மமக, கொமதேக, தவாக ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கூட் டணிக் கட்சிகளுக்கு மாவட்டங்களில் இடங்களை மாவட்டச் செயலாளர்களே ஒதுக்க வேண்டும்.

அவர்களது வெற்றியையும் மாவட் டச் செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும். கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்து விட்டு இன்றைக்குள் திமுக வேட்பாளர்களின் பட்டியல்களை தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

அதன்படி கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு முடிக்கப்பட்டு விட்டது. மாவட்டச் செயலாளர்கள் திமுக வேட்பாளர்களின் பட்டியல்களையும் சென்னைக்கு அனுப்பி விட்டனர். அதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை தி.மு. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார்.

திமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்

தூத்துக்குடி, கும்பகோணம், காஞ்சிபுரம் மாநகராட்சிகளுக்கான தி.மு. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள னர். விழுப்புரம், கோவில்பட்டி, திருக் கோவிலூர், கோட்டக்குப்பம் ஆகிய நகராட்சிகளுக்கும் தி.மு. வேட்பாளர் கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மதுராந்தகம், விக்கிரவாண்டி, வளவனூர், திருவெண்ணெய்நல்லூர், அரகண்ட நல்லூர், திருப்பனந்தாள், திருவிடை மருதூர், ஆடுதுறை, திரு புவனம், வேம் பத்தூர், திருநாகேஸ்வரம், சோழபுரம், சுவாமிமலை, பாபநாசம், அய்யம் பேட்டை, மெலட்டூர், இடைக் கழிநாடு, அம்மாப்பேட்டை, கழுகுமலை, புதூர், கடம்பூர், எட்டயபுரம், உத்திர மேரூர், வாலாஜாபாத், கருங்குழி, அச்சரப் பாக்கம் ஆகிய பேரூராட்சிகளுக்கும் தி.மு. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட் டுள்ளனர்.

திமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்

இதைத்தொடர்ந்து, தி.மு. போட்டி யிடும் வார்டுகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.  பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார். அதில், வேலூர், தஞ்சை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சி களில் போட்டியிடும் தி.மு. வேட்பா ளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரக்கோணம், இராணிப் பேட்டை, வாலாஜா, ஆற்காடு, மேல் விஷாரம், சோளிங்கர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, அம்பாசமுத்திரம், களக்காடு, விக்கிரமசிங்கபுரம் ஆகிய நகராட்சிகளுக்கும் தி.மு. வேட் பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தக்கோலம், நெமிலி, பனப் பாக்கம், காவேரிப்பாக்கம், கலவை, விளாப்பாக்கம், திமிரி, அம்மூர், திருவலம், பென்னாத்தூர், பள்ளிகொண்டா, ஒடுகத்தூர், மூலக்கரைப்பட்டி, நான்கு நேரி, ஏர்வாடி, மணிமுத்தாறு, பணகுடி, வடக்கு வள்ளியூர், திசையன்விளை, திருகுறுங்குடி, கோபாலசமுத்திரம், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், பத்தமடை, மேலச்செவல், நாரணம்மாள்புரம், சங்கர் நகர், பெருங் குளம், சாய்புரம், ஏரல், சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி, திருவைகுண்டம், ஆத்தூர், ஆறுமுகநேரி, கானம், தென் திருப்பேரை, நாசரேத், உடன்குடி ஆகிய பேரூராட்சிகளுக்கும் தி.மு. வேட் பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள மாவட்டங்களில் போட்டி யிடும் தி.மு. வேட்பாளர்கள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment