இலங்கை கடற்படையினர் அட்டூழியம் 21 தமிழக மீனவர்களை கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 1, 2022

இலங்கை கடற்படையினர் அட்டூழியம் 21 தமிழக மீனவர்களை கைது

ராமேஸ்வரம், பிப்.1 கச்சத்தீவு அருகே 2 விசைப் படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது நாகையை சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள் ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 21 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட  மீனவர்கள் நாகை மாவட்ட மீனவர்கள் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல்

நாளை வெளியீடு...!

சென்னை, பிப்.1  கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2021-2022 கல்வி ஆண்டுக்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (பி.வி.எஸ்.சி. மற்றும் .எச்.), இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான பி.டெக் (உணவு தொழில்நுட்ப படிப்பு, கோழியின தொழில்நுட்ப படிப்பு, பால்வள தொழில்நுட்ப படிப்பு) ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்புக்கு (கலையியல் பிரிவு) 22 ஆயிரத்து 240 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 21 ஆயிரத்து 899 பேர் தகுதி பெற்றுள்ளனர். கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்புக்கு (தொழிற்கல்வி) 248 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களில் 245 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இதேபோல பிடெக் (உணவு தொழில்நுட்ப படிப்பு, கோழியின தொழில்நுட்ப படிப்பு, பால்வள தொழில்நுட்ப படிப்பு) படிப்புக்கு 4 ஆயிரத்து 410 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 4 ஆயிரத்து 315 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இந்த படிப்புகளுக்கு 26 ஆயிரத்து 898 பேர் விண்ணப்பம் அனுப்பி இருந்தனர். இதில் 26 ஆயிரத்து 459 பேர் தகுதி பெற்றுள்ளனர். தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசை பட்டியல் 2ஆம் தேதி (2.2.2022) வெளியிடப்பட உள்ளது.

தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசை பட்டியலை பல்கலைக்கழக இணையதளத்தில் 2ஆம் தேதி காலை 10 மணி முதல் காணலாம். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் எழுதுகோல் விருதுபரிசீலனைக்குழு தலைவராக

பேராசிரியர் அருணன் நியமனம்

சென்னை, பிப்.1- “கலைஞர் எழுதுகோல் விருதுக்கான விருதாளர்களை தேர்வு செய்யும் பரிசீல னைக்குழு தலைவராக பேராசிரியர் அருணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை சார்பில் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

2021-2022ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில், இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் ஒரு சிறந்த இதழியலாள ருக்கு ஆண்டுதோறும்கலைஞர் எழுது கோல் விருதுமற்றும் ரூபாய் 5 லட்சம்  பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட்டார்.

மேலும் ஒவ்வோர் ஆண்டும் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி இந்த விருது வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இந்நிலையில் விருதாளரை தேர்வு செய்யும் பரிசீலனைக் குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி தலைவராக பேராசிரியர் அருணன், உறுப்பினர் செயலராக கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) உறுப்பினர்களாக மூத்த பத்திரிகையாளர்கள் ஜென்ராம், சமஸ், தராசு ஷியாம், பேராசிரியர் முனை வர் பர்வீன் சுல்தானா, தமிழ்த்துறைத் தலைவர் () படைப்பாளர் முனைவர் ரெ.மல்லிகா () அரங்க மல்லிகா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் பதவிக்காலம் 3  ஆண்டுகள் ஆகும். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வுக் குழு மாற்றியமைக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment