திருப்பூர் மாவட்ட கிராமப்புற அரசுப் பள்ளி மாணவி முதலிடம்
சென்னை, பிப்.9 தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் கால்நடை மருத்துவம்மற்றும் பராமரிப்புப் படிப்பு (பி.வி.எஸ்சி - ஏ.எச்), உணவு, கேழியினம், பால்வள தெழில்நுட்பப் படிப்புகள் உள்ளன. இவற்றுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இவற்றுக்கான பொதுப் பிரிவு தரவரிசைப் பட்டியல் கடந்த 2ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டின்படி அரசுப் பள்ளிமாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2,719 பேர் இடம்பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற மாணவி எம்.பிரியா (கட்-ஆப் மதிப்பெண் 200-க்கு 193.430) முதலிடம் பிடித்துள்ளார்.
தருமபுரியைச் சேர்ந்த பி.பவித்ரா (193.395) 2ஆம் இடத்தையும், நாமக்கல்லைச் சேர்ந்த ஜே.எஸ்.தீபகுமார் (192.995) 3ஆம் மூன்றாம் இடத்தையும், எஸ்.கனிதாரன் (192.570) 4ஆம் இடத்தையும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற மாணவி ஆர்.சுவேதா (192.195) 5ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment