முதலமைச்சர் கணினி தமிழ் விருது 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 9, 2022

முதலமைச்சர் கணினி தமிழ் விருது 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை, பிப்.9  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கணினி தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில்முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுஎன்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு விருது தொகையாக ரூ.2 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.

அந்த வகையில், 2021-ஆம் ஆண்டுக்குரிய முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு தனிநபர் மற்றும் நிறுவனத்திடம் இருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் வரவேற்கப்பட்டு, விருதுக்கான விண்ணப்பம் வந்த சேரவேண்டிய இறுதி நாள் 31.12.2021 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விருதுக்கு விண்ணப்பிக்கும் காலம் வருகிற 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருள்கள் 2018, 2019, 2020-ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். விண்ணப்பங்கள், தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 600 008 என்ற முகவரிக்கு 28ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-28190412, 28190413 என்ற தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை  www.tamilvalarchithurai.com  என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்:

12,607 பதவியிடங்களுக்கு 57,778 வேட்பாளர்கள் போட்டி

சென்னை, பிப்.9  நகராட்சி உள்ளாட்சி அமைப்பு களுக்கு 57,778 வேட்பாளர்கள் இறுதியாக போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், மொத்தம் 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணையினை 26.01.2022 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தல்கள் 19.02.2022 அன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது,

மாநகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 28.01.2022 முதல் இறுதி நாளான 04.02.2022 வரை மொத்தம் 74,416 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர் / உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் விதிமுறையை பின்பற்றாமல் இருந்ததால், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆகியோரின் அறிக்கையின்படி தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சியில் 33 வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அனைத்து 12 வார்டு உறுப்பினர் பதவியிடங்கருக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மொத்தமுள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சியில் மொத்தம் 2,062 வேட்பு மனுக்கள் உரிய பரிசீலனைக்குப் பின் நிராகரிக்கப்பட்டன. 14,324 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர். 218 நிமிடங்களுக்கு 218 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சியகங்கை மாவட்டம் காணாடுகாத்தாள பேரூராட்சி வார்டில் நிமிடத்திற்கு வேட்பு மனுக்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இறுதியாக மொத்தம் 12.607 பதவியிடங்கருக்கு மொத்தம் 57.778 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

உள்ளாட்சி அமைப்பு பதவிகள் : மாநகராட்சி வார்டு உறுப்பினர்:

மொத்தம் பதவி இடங்கள் :1374

மொத்தம் பெறப்பட்ட வேட்புமனுக்கள் : 14701

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் : 722

திரும்பப் பெறப்பட்ட வேட்பு மனுக்கள் : 2779

போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் : 4

வேட்பு மனு எதுவும் தாக்கல் செய்யப்படாத பதவியிடங்கள் : 0

இறுதியாக தேர்தல் நடைபெற உள்ள பதவியிடங்கள் : 1370

இறுதியாக போட்டியிடும் வேட்பாளர்கள் :11196

உள்ளாட்சி அமைப்பு பதவிகள் : நகராட்சி வார்டு உறுப்பினர்:

மொத்தம் பதவி இடங்கள் :3843

மொத்தம் பெறப்பட்ட வேட்புமனுக்கள் : 23354

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் : 691

திரும்பப் பெறப்பட்ட வேட்பு மனுக்கள் : 4723

போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் : 18

வேட்பு மனு எதுவும் தாக்கல் செய்யப்படாத பதவியிடங்கள் : 0

இறுதியாக தேர்தல் நடைபெற உள்ள பதவியிடங்கள் : 3825

இறுதியாக போட்டியிடும் வேட்பாளர்கள் :17922

உள்ளாட்சி அமைப்பு பதவிகள் : பேரூராட்சி வார்டு உறுப்பினர்:

மொத்தம் பதவி இடங்கள் :7609

மொத்தம் பெறப்பட்ட வேட்புமனுக்கள் : 36328

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் : 649

திரும்பப் பெறப்பட்ட வேட்பு மனுக்கள் : 6822

போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் : 196

வேட்பு மனு எதுவும் தாக்கல் செய்யப்படாத பதவியிடங்கள் : 1

இறுதியாக தேர்தல் நடைபெற உள்ள பதவியிடங்கள் : 7412

இறுதியாக போட்டியிடும் வேட்பாளர்கள் :28660

உள்ளாட்சி அமைப்பு பதவிகள் : மொத்தம்

மொத்தம் பதவி இடங்கள் :12826

மொத்தம் பெறப்பட்ட வேட்புமனுக்கள் : 74383

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் : 2062

திரும்பப் பெறப்பட்ட வேட்பு மனுக்கள் : 14324

போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் : 218

வேட்பு மனு எதுவும் தாக்கல் செய்யப்படாத

பதவியிடங்கள் : 1

இறுதியாக தேர்தல் நடைபெற உள்ள பதவியிடங்கள் : 12607

இறுதியாக போட்டியிடும் வேட்பாளர்கள் :57778

 

 

No comments:

Post a Comment