மின் நூலக பயன்பாடு:பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 9, 2022

மின் நூலக பயன்பாடு:பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தில்

உதவிப் பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை

வல்லம், பிப்.9 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகம் உள்ள அர்ஜூன் சிங் நூலகத்தில் மின் இதழ்கள், மின் புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகள் தேடல் பற்றிய இரண்டு நாள் பயிற்சி பட்டறை 03.02.2022 & 04.02.2022 அன்று பல்கலைக்கழகத்தில் புதிதாக சேர்ந்துள்ள உதவி பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு நடத்தப்பட்டது. 

இப்பயிற்சி பட்டறை தொடக்க நாளில் முனைவர்.த.நர்மதா இயக்குநர் (பொ) நூலகம் வரவேற்புரை ஆற்றினார். முனைவர் விஜயலெட்சுமி கலை அறிவியல் மற்றும் மேலாண்மை புல தலைவர் தலைமை உரையில் இதன் முக்கியத்துவத்தை அறிவுறுத்தினார். முதல் அமர்வு முனைவர் கி.ராஜு, உதவி நூலகர், நமது நூலக வசதிகள் பற்றியும், மின் இதழ்கள், மின் புத்தகங்கள் பற்றியும் இதன் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை பற்றியும் எடுத்துக் கூறினார்.

இரண்டாம் அமர்வில் முனைவர் ச.குமரன் - முதன்மையர் ஆராய்ச்சி - ஆராய்ச்சி இதழ்கள் தேடல் மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகளை எப்படி எழுதுவது, எந்தெந்த ஆராய்ச்சி இதழ்களில் வெளியிடுவது குறித்தும் அதனுடைய நுட்பங்களையும் நுணுக்கங்களையும், ஆய்வின் முக்கியத்துவங்களையும் எடுத்துக் கூறினார்.

இரண்டு நாள் நிகழ்வுகளை தொகுத்து கூறி உதவி நூலகர், க.விவேகானந்தன் நன்றி கூறினார். பயிற்சி பட்டறை இனிதே நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment