போராட்டத்தின்போது இறந்த விவசாயிகளுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்காத பிரதமர் மோடி 2-3 பெரும் பணக்காரர்களுக்காக கடினமாக உழைக்கிறார் : ராகுல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 15, 2022

போராட்டத்தின்போது இறந்த விவசாயிகளுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்காத பிரதமர் மோடி 2-3 பெரும் பணக்காரர்களுக்காக கடினமாக உழைக்கிறார் : ராகுல்

சண்டிகார், பிப்.15  2-_3 பெரும் பணக்காரர்களுக்காக  பிரதமர் மோடி கடினமாக உழைக் கிறார், ஆனால் பஞ்சாப் விவசாயிகள் ஓராண்டாக பசியுடன் இருந்தனர் என காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள் ளார்.

பஞ்சாபில் பிப்ரவரி 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.  பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி பஞ்சாபின் ஹோஷி யார்பூரில்நவி சோச் நவா பஞ்சாப்என்ற பெயரில் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

நாட்டின் 2-_3 பெரும் பணக் காரர்களுக்காக பிரதமர் மோடி கடின உழைத்துக் கொண்டிருந் தார். இதனால் அந்த ஓராண் டில் பஞ்சாப் விவசாயிகள் குளிர்காலத்தில் பசியுடன் இருந்தனர். போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு நாடாளுமன்றத்தில் 2 நிமிடம் அமைதி இரங்கல் செலுத்த அவரால் முடிய வில்லை. இழப்பீடு வழங்க வில்லை. ஆனால் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அரசுகள் இழப்பீடு வழங்கின.

ஒவ்வொரு பேச்சிலும் 15 லட்சம் ரூபாய் வங்கிக் கணக் கில் டெபாசிட் செய்வேன் என்றும், 2 கோடி இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பு தருவேன் என்றும் பிரதமர் மோடி கூறினார். யாருக்காவது கிடைத்ததா? ஊழல், வேலை வாய்ப்பு பற்றி ஏன் பேச வில்லை? பணமதிப்பு நீக்கம் செய்தார், ஜிஎஸ்டியை விதித் தார். யாருக்கு பலன் கிடைத் தது?

நீங்கள் எதைப் பயிரிட்டா லும், அது உருளைக்கிழங்கு சிப்ஸ் அல்லது தக்காளி சாஸ் (பதப்படுத்திய தக்காளி உணவு)  எதுவாக இருந்தா லும், உங்கள் விளைபொருட் களை பண்ணைகளில் இருந்து உணவுப் பூங்காவில் உணவு பதப்படுத்தும் பிரி வுக்கு நேரடியாக மாற்று வதன் மூலம் நீங்கள் அனைத் தையும் தயாரிக்கலாம். பஞ்சாபில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது இந்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசி னார்

No comments:

Post a Comment