12- 18 வயதினருக்கான கோர்பேவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 22, 2022

12- 18 வயதினருக்கான கோர்பேவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி

 புதுடில்லி, பிப்.22 கோர்பேவேக்ஸ் தடுப் பூசிக்கு ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ஆர்.பி.டி. புரத துணைப்பிரிவு கரோனா தடுப்பூசியாக கோர்பேவேக்ஸ் உள்ளது. பயாலாஜிக்கல் என்ற நிறு வனம் இந்த தடுப்பூசியை தயாரித்துள்ளது. இத்தடுப்பூசியை 5 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செலுத்துவதற்கு 2-ஆம் கட்ட மருத்துவமனை பரிசோ தனை நடத்துவதற்கு கடந்த செப்டம்பர் மாதம் அனுமதி அளிக்கப்பட்டது.

அந்தப் பரிசோதனையில், இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, கரோனா வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க வல்லது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, நாட்டின் நடப்பு கரோனா சூழ்நிலை, பரவலான தடுப்பூசி பயன்பாட்டை கருத்தில்கொண்டு, 12 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோர்பேவேக்ஸ் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று பயாலாஜிக்கல் நிறு வனம் அனுமதி கோரியிருந்தது.  இந்த நிலையில்,  கோர்பவேக்ஸ் தடுப்பூசிக்கு ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

No comments:

Post a Comment