உலகில் கடவுள் நம்பிக்கை இல்லாத முதல் 10 நாடுகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 16, 2022

உலகில் கடவுள் நம்பிக்கை இல்லாத முதல் 10 நாடுகள்!


உலகிலுள்ள பெரும்பான்மையான நாடுகளில், கடவுள் நம்பிக்கையுள்ள மக்கள் வாழுகின்றனர். அதேபோல் தற்போது கடவுள் நம்பிக்கை இல்லாத நாடுகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சில காலங்களுக்குமுன் கடவுள் நம்பிக்கையில் முழு மையாக இருந்த நாடுகள், தற்போது கடவுள் நம்பிக்கை அற்றதாகவும், கடவுள் இருந்தாலும், இல்லையானாலும் பிரச்சினை இல்லை என்னும் நிலை கொண்ட, அக்னாஸ்ட்டிகளாகவும் உள்ளனர்.

அப்படி தற்போதுவரை மக்கள் தொகை விகிதத்தில் அதிக அளவு இறை மறுப்பாளர்களைக் கொண்ட நாடு களை இப்பொழுது காண்போம்.

எண்: 10 டென்மார்க்

அய்ரோப்பிய கண்டத்தில் உள்ள ஒரு நாடு டென்மார்க். இங்கே 58 லட்சம் மக்கள் வாழுகிறார்கள். பிரபலமான சுற்றுலா நாடுகளில், டென்மார்க்கும் ஒன்றாகும்.

இந்த நாடு 42,430 கி.மீ. சுற்றளவு பரப்பளவைக் கொண்ட தாகும். 2010 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 47 சதவிகித மக்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகவும், 22 சதவிகித மக்கள் கடவுள் மறுப்பாளர்களாகவும், மீத முள்ளவர்கள் அக்னாஸ்ட்டிகளாகவும் உள்ளனர்.

ஆனால், தற்போது 61 சதவிகித மக்கள் கடவுள் மறுப் பாளர்கள் மற்றும் அக்னாஸ்ட்டிகளாக (கடவுளைப்பற்றி கவலை இல்லாதவர்கள்) உள்ளனர்.

இது கிட்டத்தட்ட 2010 இல் எடுக்கப்பட்ட கணக் கெடுப்பைவிட, ஒரு மடங்கு அதிகமாகும்.

எண்: 9 நார்வே

அய்ரோப்பிய கண் டத்தில் இருக்கின்ற நாடுகளில் ஒன்றுதான் நார்வே. இங்கே சுமா ராக 55 லட்சம் மக்கள் வாழுகிறார்கள்.

3,65,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட நாடாகும் இது. இங்கே வாழும் மக்கள் மகிழ்ச்சியாக வாழு கிறார்கள். இங்கே இருக்கின்ற மக்கள் 50 சதவிகிதத்திற்குமேல் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்தான்.

இங்கே பெரும்பாலும் சுற்றுலாவிற்காகத்தான் மக்கள்  அதிகமாக வருகிறார்கள். ஓரினச் சேர்க்கை மக்களுக்கு அதிகமான சுதந்திரம் கொடுத்துள்ள நாடாகும்.

இங்கு 62 சதவிகித மக்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள். மீதமுள்ள மக்கள் கிறிஸ்தவம், ஈடன் போன்ற மதங்களைப் பின்பற்றுகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே கடவுள் நம்பிக்கையற்ற நாடுகளில், நார்வே முதல் 10 இடங்களில் இருப்பது குறிப் பிடத்தக்கது.

எண்: 8 ஆஸ்திரேலியா

2.5 கோடி மக்களைக் கொண்ட ஆஸ்திரேலியா, 76 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. தீவு நாடு என்பதால், சுற்றுலாப் பயணிகளும், விடுமுறையைச் செலவிடுபவர்களும் அதிகமாகப் போய்விட்டு வரு கிறார்கள். இங்கே பெரும்பான்மையான மக்கள் கிறிஸ்தவ  மதத்தைத்தான் பின்பற்றுகிறார்கள். ஆனால், அண்மைக் காலமாக மக்களுக்கு கடவுளின்மேல் நம்பிக்கைக் குறைந்துகொண்டே வருகிறது.

2006 ஆம் ஆண்டு 19 சதவிகித மக்களும்,

2015 ஆம் ஆண்டு 22 சதவிகித மக்களும்,

2016 ஆம் ஆண்டு 30 சதவிகித மக்களும் கடவுள் நம்பிக்கை இல்லை என கூறியுள்ளனர்.

தற்போது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கடவுள் குறித்து எந்த விருப்பமும் இல்லாது இருப்பவர்கள் என சேர்த்து சுமார் 63 சதவிகித மக்கள் இருக்கிறார்கள்.

எண்: 7 வியட்நாம்

சோசலிஸ்ட் ரிபப்ளிக் வியட்நாம் என்று சொல்கின்ற இந்த நாடு, ஆசிய கண் டத்தில் சீனாவிற்கு அடுத்தபடியாக அமைந் திருக்கின்றது. இந்த நாட்டினுடைய பரப்பளவு 3,10,000 சதுர கிலோ மீட்டர் பரப்ப ளவு கொண்டது.

இங்கே 9.6 கோடி மக்கள் வாழுகிறார்கள். இந்த நாட் டினுடைய அரசமைப்புச் சட்டப்படி, எந்த மதமும் இங்கு கட்டாயம் இல்லை. யாரும், எந்த மதத்தை ஏற்கவும், வழிபடவும் அனைவருக்கும் உரிமை உண்டு.

இங்கே 2007 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 87 சதவிகித மக்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாகவே இருந்துள்ளனர்.

பின்பு, புத்த மதம், கொயட் ரிலிஜன் போன்ற மதங்களில் மக்கள் சேர்ந்துள்ளனர். இதனால், தற்போது சுமார் 63 சத விகித மக்கள் கடவுள் நம்பிக்கையற்றவர்களாக உள்ளனர்.

எண்: 6 அசர்பைஜான்

கிழக்கு அய்ரோப்பாவில் இருக்கின்ற ஒரு சிறிய நாடுதான் இது. இங்கே 1.2 கோடி மக்கள் வாழுகிறார்கள். சுமார் 82 ஆயிரத்து 658 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள நாடு. இது ஒரு இஸ்லாமிய நாடு. ஆனால், இங்குள்ள மக்கள் பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக உள்ளனர்.

2006-2008 இல் கேலக்பூர் என்று சொல்லப்படுகின்ற ஒரு நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் வெறும் 21 சதவிகித மக்களே அன்றாட வாழ்க்கைக்கு மதம் தேவை என்று வாக்களித்து இருந்தனர்.

தற்போது இந்த நிலை மாறி, சுமார் 62 சதவிகித மக்கள் கடவுள் மறுப்பாளர்களாகவும், மீதமுள்ள மக்கள் இஸ்லாம், கிறிஸ்தவம், ஈடன் மதங்களையும் பின்பற்றுகிறார்கள்.

எண்: 5 பெல்ஜியம்

அய்ரோப்பிய கண்டத்தில், ஜெர்மனி மற்றும் லக்சம் பர்க்கிற்கு அடுத்து இருப்பதுதான் பெல்ஜியம். சாக்லெட்டு களுக்குப் பெயர்போன நாடு இது. இங்கே ஒரு கோடியே 16 லட்சம் மக்கள் வாழுகிறார்கள். இந்த நாடு 30 ஆயிரத்து 280 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நாடு.

இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகின்றனர். மீதமுள்ள மக்கள் இஸ்லாம், ஈடன் போன்றவற்றைப் பின்பற்றுகின்றனர்.

2012 ஆம் ஆண்டில் 32 சதவிகித மக்கள் எந்த மதத் தையும் ஏற்காதவர்களாகவும், 17.1 சதவிகித மக்கள் அக் னாஸ்ட்டிகளாகவும் இருந்துள்ளனர்.

தற்போது 2007 ஆம் ஆண்டில், மொத்தமாக 62 சத விகித மக்கள் எந்த மதத்தையும், கடவுளையும் ஏற்காத வர்களாக உள்ளனர்.

எண்: 4 நெதர்லாண்ட்

டச்சு நாடு என்று அழைக்கப்படும் இந்த நாடு அய் ரோப்பிய கண்டத்தில் இருக்கிறது. இங்கே சுமாராக ஒரு கோடியே 76 லட்சம் மக்கள் வாழுகிறார்கள். 41 ஆயிரத்து 865 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நாடு இது.

20 ஆம் நூற்றாண்டிற்கு முன்பகுதி வரையில் இந்த நாடு முழுக்க முழுக்க கிறிஸ்தவ நாடாகவே இருந்தது. ஆனால், இப்பொழுது பல்வேறு கட்ட மக்கள் வாழு கிறார்கள். கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம் என பல மக்கள் வாழுகிறார்கள்.

எனினும், 2010 ஆம் ஆண்டிலேயே எந்த மதத்தையும் ஏற்காத மக்கள் 51 சதவிகிதமாக இருந்தார்கள்.

இது கடவுள் நம்பிக்கை உள்ள மக்களைவிட அதிக மாகும். தற்போது அந்த விகிதம் அதிகரித்து, எத்திஸ்ட் மற்றும் அக்னாஸ்ட்டிக் என சேர்த்து சுமாராக 66 சதவிகித மக்கள் இருக்கிறார்கள்.

எண்: 3 செக் ரிபப்ளிக்

ஆஸ்திரிய மற்றும் ஜெர்மனிக்கு இடையே உள்ள ஒரு சிறிய நாடுதான் செக் ரிபப்ளிக்.

இந்த நாட்டில் 1 .7 கோடி மக்கள் இருக்கிறார்கள். சிறிய நாடாக இருந்தாலும், உலகத்தின் பேமஸ் ஆன்டி வைரசான ஆவஸ்ட் மற்றும் ஸ்கோடா கார் பிராண்ட், பீர் பிரியர்களின் பட்வைசர் மற்றும் பேட்டா எனும் செருப்பு நிறுவனம் எல்லாம் இந்த நாட்டினுடைய நிறுவனங்கள்தான்.

இங்கே வாழுகின்ற மக்களில், 34 சதவிகித மக்கள் கடவுள் நம்பிக்கையற்றவர்களாகவும், 44 சதவிகித மக்கள் எந்தக் கடவுளையும் ஏற்காமல் உள்ள அக்னாஸ்ட்டி களாகவும் உள்ளனர்.

இங்கே மொத்தமாக 72 சதவிகித மக்கள் எந்த மதத்தை யும், எந்தக் குறிப்பிட்ட கடவுளையும் நம்பாமல் இருக் கின்றனர்.

எண்: 2 சுவீடன்

அய்ரோப்பிய கண்டத்தில் மிகப் பிரபலமான நாடுகளில் ஒன்றுதான் சுவீடன்.

இங்கு ஒரு கோடியே 18 லட்சம் மக்கள் வாழுகிறார்கள். 4 லட்சத்து 10 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள நாடாகும் இது.

பெரிய சுற்றுலா நாடு என்பதினால், ஆண்டுதோறும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கே வருகின்றனர். இங்கு கிறிஸ்தவ மதம்தான் முக்கியமான மதமாகக் காணப் பட்டது.

ஆனால், தற்போது பெரும்பான்மையான மக்கள் கடவுள் நம்பிக்கையை ஏற்பதில்லை. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதால், அவர்களுக்கு கடவுள் குறித்தான எந்த எண்ணமும் இங்கு இல்லை.

யூரோ பேரோ மீட்டர்ஃபோல் கணக்கெடுப்பின்படி, 45 சதவிகித மக்கள் கடவுளை ஏற்கவில்லை. மாறாக, ஓர் இயற்கை சக்தி உள்ளதெனவும் 34 சதவிகித மக்கள் கூறியுள்ளனர்.

இந்நாட்டில் வாழும் மக்களில் வெறும் 18 சதவிகித மக்கள் மட்டுமே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக உள்ளார்கள்.

எண்: 1 சீனா

ஆசிய கண்டத்தில் அதிக மக்கள் தொகைக் கொண்ட பெரிய நாடுதான் சீனா. இங்கு சுமார் 140 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழுகிறார்கள்.

இந்நாடு சுமார் 93 லட்சத்து 88 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப் பளவைக் கொண்ட தாகும்.

இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் எந்த மதத்தையும் பின் பற்றாதவர்கள்தான். இந்நாட்டு அரசமைப்புச் சட்டப் படி, இந்தியாவைப் போல, எந்த மதத்தையும் அங்கீகரிக்க வில்லை.

செக்குலரிஸ்ட் கண்ட்ரி எனும் நிலையில்தான் உள்ளது. இங்கு புத்தம், ஃபாண்டிசியம், பாவோசியம் எனும் மூன்று  நெறிமுறை மதங்களை அதிகமாகப் பின்பற்றுகின்றனர்.

பல காலங்களாக கம்யூனிச பாரம்பரியம் உள்ள சீனா வில், கடவுள்பற்றி எந்த விருப்பமும் இல்லாத மக்கள்தான் அதிகம்.

2015 இல் கேலப் இண்டர்நேசனல் நடத்திய கருத்துக் கணிப்பில், 61 சதவிகித மக்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்தான்.

தற்போது அந்த விகிதம் 3 சதவிகிதமும், கடவுள்பற்றி எந்த விருப்பமும் இல்லாதவர்கள் 18 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.

இதுதவிர, இயற்கையின்மீது நம்பிக்கை உள்ளவர்கள் 7 சதவிகிதம் உள்ளார்கள்.

மொத்தமாக 88 சதவிகிதம்முதல் 90 சதவிகித மக்கள் சீனாவில் உள்ளனர்.

கூடுதல் தகவலாக,

மேற்கண்ட நாடுகளைத் தவிர, ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில், கணிசமான அளவில் கடவுள் மறுப்பாளர்கள் உள்ளனர்.

மேற்கண்ட தகவல்கள் எல்லாம் வேல்டு பாபுலேசன் மூவி தளத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கடவுள் மறுப்பாளர்கள் அதிகமாக வாழும் நாடு நார்வே. இங்கு இருக்கின்ற மற்ற மதங்களைவிட, கடவுள் மறுப்பாளர்கள் அதிகமாக வாழுகிறார்கள்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களைவிட, அதிகமாக நாத்திகர்கள் உருவான முதல் நாடும் இதுதான். உலகின் மகிழ்ச்சியான நாடுகளில், நார்வே ஆறாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில், இந்தியா 5 சதவிகித கடவுள் மறுப் பாளர்களைக் கொண்டுள்ளது.

மேலும், உலகில் கிறிஸ்தவம், இஸ்லாமுக்கு அடுத்த படியாக கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் மற்றும் அக் னாஸ்ட்டிகள்தான் மூன்றாவது இடத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment