கரோனா தொற்று வேகமாக குறைவதால் தேவைப்படுவோருக்கு மட்டும் பரிசோதனை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 17, 2022

கரோனா தொற்று வேகமாக குறைவதால் தேவைப்படுவோருக்கு மட்டும் பரிசோதனை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

சென்னை, பிப்.17 தொற்று வேகமாக குறைவதால் தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனை தேவையில்லாத ஒன்றாக மாறிவிட்டது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை ஓமந்தூரார் அரசு பன் னோக்கு மருத்துவமனையில் அமைக் கப்பட்டு வரும் ரூ.35 கோடி மதிப்பிலான ரோபோடிக் அறுவைச் சிகிச்சை அரங்கப் பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (16.2.2022)  ஆய்வு செய்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மருத்துவ மனை இயக்குநர் டாக்டர் விமலா ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிய தாவது:-

இந்த ரோபோடிக் அறுவைச் சிகிச்சை அரங்கத்தை விரைவில் முதல மைச்சர் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைப்பார். இந்தியாவிலேயே இதுபோன்ற நவீன மருத்துவ கருவிகள் 74 இடங்களில் மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 6 தனி யார் மருத்துவமனைகளில் உள்ளன.

இந்தியாவில் எந்த மாநில அரசு மருத்துவமனையிலும் இந்த ரோபோ டிக் அறுவை சிகிச்சை செய்யும் வசதி இல்லை. தற்போது தமிழ்நாட்டில் தான் அரசு பன்னோக்கு மருத்துவமனை யில் அமைய இருக்கிறது. இதற்காக 6 மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டு விசேஷமாக பயிற்சி பெற்றுள்ளனர்.

இதில் முதலமைச்சர் மருத்துவ காப் பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். புற்றுநோய் மிக ஆபத் தான ஒன்று. எனவே அதனை முதல் நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக அரசு பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதற்காக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையுடன் இணைந்து புற்றுநோய் பதிவேடு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. 3 அல்லது 4ஆம் நிலையில் புற்றுநோயை கண்டறிந்து சிகிச்சை அளித்து காப்பாற்றுவது அரிதானது. எனவே, முதல் மற்றும் 2ஆம் நிலை புற்றுநோயாளிகளை கண் டறிவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு விரைவுபடுத்தி கொண்டிருக்கிறது. புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்பு களை குறைப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இதுவரை 49 லட்சத்து 79 ஆயிரத்து 565 பேர் பயன் அடைந்து உள்ளனர்.

வருகிற ஞாயிற்றுக்கிழமை (20.2.2022) சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் 50 லட்சமாவது பயனாளிக்கு முதல்-அமைச்சரே, அவரது வீட்டுக்கு சென்று மருத்துவ சேவை வழங்குகிற நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும், அங்கேயே 188 அதிநவீன உயிர்காக்கும் உபகர ணங்களுடன் கூடிய புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் மு..ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அந்த வகையில் 1,491 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாட்டில் இருக்க போகிறது.

இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தில் இதுவரை 18 ஆயிரத்து 580 பேர் பயன்பெற்றுள்ளனர். இதற்காக அரசு சார்பில் 16 கோடியே 97 லட்சத்து 35 ஆயிரத்து 95 ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது. மக் களை தேடி மருத்துவத்தில் இதுவரை ரூ.168 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளது. நெடுஞ்சாலைகளில் குறிப் பிட்ட இடைவெளியில், அருகில் எந் தெந்த மருத்துவமனைகள் இருக்கிறது என்ற தகவல் அடங்கிய விளம்பர பலகைகளை என்.எச்.எம். சார்பில் வைக்கப்பட இருக்கிறது.

கடந்த ஆண்டு ஜனவரியில் சாலை விபத்துகளில் 1,534 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த ஆண்டு ஜனவரியில் 765 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். சரி பாதியாக உயிரிழப்பு குறைந்துள்ளது. விபத்து மரணம் இல்லாத தமிழ் நாட்டை உருவாக்க தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் கரோனா தொற்று வேகமாக குறைகிறது. எனவே தேவைப்படுவோருக்கு மட்டுமே கரோனா பரிசோதனை செய்யப்படு கிறது. அந்தவகையில் 16.2.2022 அன்று  80 ஆயிரம் அளவில் தான் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது கரோனா பரிசோதனை தேவையில்லாத ஒன்றாக மாறிவிட் டது. இருந்தாலும், தமிழ்நாட்டில் தான் அதிக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment