தஞ்சை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் P.G. இராஜேந்திரன் அவர்களின் தாயார் யசோதாம்பாள் (வயது 95) உடல்நலக்குறைவால் மறைவுற்றார்.
கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வெற்றிக்குமார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூர்பாண்டியன், தஞ்சை மாநகர தலைவர் நரேந்திரன், செயலாளர் டேவிட், நெல்லுப்பட்டு இராமலிங்கம் ஆகியோர் மறைந்த யசோதாம்பாள் உடலுக்கு கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தினர்.
செய்தி அறிந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் P.G.இராஜேந்திரன் அவர்களிடம் மருத்துவமனையிலிருந்து தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதலும் இரங்கலும் தெரிவித்தார் (20-01-2022).
- - - - -
நன்னிலம் நகர மேனாள் பகுத்தறி வாளர் கழக தலைவரும், ஓய்வுபெற்ற ஆசிரியரு மான வை.மாறன் (வயது 83) மறை வுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
No comments:
Post a Comment