சிலைகளில் மட்டும் இல்லை பெரியார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 20, 2022

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்

தொகுப்புதிராவிடர் கழகத் தொழில்நுட்பக் குழு

அண்மையில் கோயம்புத்தூர் வெள்ளலூர் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்குச் சிலர் செருப்பு மாலை அணிவித்தனர்!

இதனைக் கண்டித்துத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்தார்கள்.

தமிழ்நாடு அரசும் விரைவாகச் செயல்பட்டு, இந்து முன்னணியைச் சார்ந்த இருவரைக் கைது செய்தது.

இதற்கிடையில் பெரியார் சிலை அவமதிப்பைக் கண்டித்து, தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் தங்கள் எதிர்ப்பைப் போராட்டங்களின் வாயிலாக வெளிப்படுத்தின.

அதேபோல சமூக ஊடகங்களிலும் "பெரும் வெடிப்பு" எதிர்த்துக் கிளம்பியது!

"சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்" எனத் தலைப்பிட்டு ஆண்களும், பெண்களும் அதிரடி புரட்சி செய்தார்கள்! இவர்கள் அனைவரும் பெரும் கல்வி கற்று உள்நாடு, வெளிநாடுகளில் உயர் பதவிகளில் இருப்பவர்கள்! குறிப்பாக இவர்கள் திராவிடர் கழக உறுப்பினர்கள் இல்லை என்பதையும் சேர்த்தே சொல்கிறோம்!

உதாரணத்திற்கு ஓமான் நாட்டில் மருத்துவராகப் பணிபுரியும் சென்பாலன் அவர்கள் மட்டும் ஒரே நாளில் 33  பதிவுகள் இட்டு "Trending" யைத் தொடங்கி வைத்தார்!

இதோ அந்த மருத்துவர் மற்றும் ஏனையோரின் பதிவுகள்!

1) “அதெல்லாம் சாமி கண்ணை குத்தாது.” என்று பேசும் ஆறு வயது குழந்தையின் பகுத்தறிவுச் சிந்தனையில் தான் பெரியார் இருக்கிறார்.

சிலையில் இருக்கிறார் என நினைத்து அங்கு காவி பெயிண்ட் ஊற்றிக் கொண்டிருக்கின்றனர்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

2) 50 வருசத்துக்கு முன்னாடி மாதிரி இல்லாமல், பெண் குழந்தை பிறந்தால் பெற்றோர் ஜாலியா கொண்டாடுறாங்கல்ல, அங்க இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

3) நான் வேலைக்கு போறேன். என் ஏடிஎம் கார்டு என்கிட்ட தான் இருக்கும்ன்னு பெண்கள் சொல்றாங்கள்ல, அங்க இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

4) நீயும் மனுசன், நானும் மனுசன். இதுல என்னடா உயர்வு தாழ்வுன்னு கேட்குறாங்கல்ல, அங்க இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

5) கணவன் இறந்தால் தீயில் குதிக்க தேவையில்லை. அதற்கடுத்தும் வாழ்க்கை இருக்குன்னு இப்ப எல்லாரும் ஒத்துக்கிறாங்கல்ல, அங்க இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

6) வயதுக்கு வந்த உடனே மாப்பிள்ளை பார்க்கும் காலம் மாறிப்போய், இப்ப என்ன அவசரம் 'பிஜி' முடிக்கட்டும்ன்னு சொல்றோம்ல, அங்க இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

7) ஆணா இருந்தா என்ன, பொண்ணா இருந்தா என்ன, வேலைக்கு போய் சொந்தக்கால்ல நிக்குறது தான் சுயமரியாதை அப்படின்னு சொல்ல ஆரம்பிச்சிருக்கோம்ல, அங்க இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

8) படிக்கிறதுக்கு கட்டை விரலைக் கேட்டால் பட்டை உரியும்ன்னு சொல்றோம்ல, அங்க இருக்கார் பெரியார்

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

9) கோவில்ல திருட்டை தடுக்க சிசிடிவி கேமரா வைக்குறோம்ல, அங்க இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

10) அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், ஆகனும்ன்னு சொல்றோம்ல, அங்க இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

11) இண்டர்நெட் யுகத்தில் வேப்பமரத்தில் பேய் இருக்குன்னு சொன்னா ஆறு மாத குழந்தை கூட பொக்கை வாயில் சிரிக்கிறதே, அங்க இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

12) அந்தம்மாவுக்கு சாமி வந்துருச்சுன்னு சொன்னா, சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட அழைச்சிட்டு போன்னு சொல்றாங்களே அங்க இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

13) பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்பது கேவலம், சட்டப்படி குற்றம்ன்னு சொல்றாங்கல்ல, அங்க இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

14) இன்னைக்கு வடக்க சூலம், நாளைக்கு தெக்க சூலம்ன்னு சுத்துன காலம் மாறி நாலு திசையிலும் தினமும் பறக்கிறோமே அங்க இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

15) பல்லி விழுந்த பலன் பார்த்த காலம் போய், பிரபஞ்சத்தின் இன்னொரு மூலையில் எரிகல் விழுவதை ஆராய்ச்சி செய்கிறோமே அங்க இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

16) கடல் தாண்டுனா தோசம் என்பது மாறி, படிக்கவும், வேலைக்கும், சுற்றுலாவிற்கும் உலகம் எங்கும் சுத்துறோமே அங்க இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

17) சிவக்கொழுந்து!! துண்டை தோளை விட்டு இறக்காதேன்னு சொன்னோம்ல, அங்க இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

18) யாகம் பண்ணுனா மழை வரும்ன்னு சொன்னா ஹி ஹின்னு சிரிக்கிறோம்ல, அங்க இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

19) பாதுகாப்புக்கு மிருத்யுஞ் ஜெய யாகம் இருந்தாலும் அதை நம்பாம, குண்டு துளைக்காத பென்ஸ் கார் வாங்குறாங்கல்ல, அங்க இருக்கார் பெரியார்

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

20) சூத்திரர், பஞ்சமர்களுக்கு அனுமதி இல்லைன்னு இப்ப அறிவிப்பு பலகை வைக்க எந்த ஹோட்டல் முதலாளியாலும் நினைச்சுக் கூட பார்க்க முடியாதுல, அங்க இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

21) தேர்தல்ல ஜெயிக்க சத்ரு சம்ஹார யாகத்தை நம்பாம, போட்டோஷாப்பை நம்புறல, அங்க இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

22) கடவுள் மேல சத்தியமா கடனை திருப்பித் தர்றேன்னு சொன்னாக்கூட நம்பாம, சிபில் ஸ்கோர் வச்சு கடன் தர்றாங்கல்ல, அங்க இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

23) காருக்கு முன்னாடி கட்டுன எலுமிச்சம்பழத்தை நம்பாமல், இன்சூரன்ஸ் எடுக்குறாங்கல்ல, அங்க இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

24) தொட்டா தீட்டு, பார்த்தா தீட்டு அப்படின்னு இருந்த இழிகுணம் மாறி, அனைவரும் சமம்ன்னு நினைக்குறோம்ல, அந்த சிந்தனையில் இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

25) வேலைக்குப் போற பெண்கள் இழிவானவர்கள் என நினைப்பதில் இருந்து மாறி, படிச்சுட்டு ஏன் வீட்ல இருக்க, வேலைக்குப் போலாம்ல என கேட்கிறோமே, அங்க இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

26) மூளை இல்ல? இந்தக் காலத்தில் போய் மஞ்சள் காமாலைக்கு சூடு வைக்கிற? முதல்ல மருத்துவமனைக்குப் போன்னு சொல்ற ஆயாவின் வார்த்தைகளில் இருக்கிறார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

27) Chickenpox மாரியம்மா இல்ல, வேரிசெல்லா வைரஸ்ன்னு சொல்றோம்ல, அங்க இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

28) செருப்பு போடாமல் சாலையில் நடப்பதை அசுத்தம் என நினைக்கிறோம்ல, அங்க இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

29) நம்ம வீட்டு கழிப்பறையை சுத்தமா வைப்பது நம்ம கடமைன்னு நினைக்கிறோம்ல, அங்க இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

30) சூரிய கிரகணத்தில் சாப்பிட்டால் விசம்ன்னு சொல்லி வச்ச பொய்களை தூக்கிப் போட்டு அது ஒரு வானியல் நிகழ்வுன்னு புரிஞ்சுக்கிறோமே, அங்க இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

31) மந்திரத்தில் மாங்காய் காய்க்காது என முழு திடமாக நம்புகிறோமே, அந்த நம்பிக்கையில் இருப்பது பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

32) “போன ஜென்ம பாவம் தான் காரணம்ன்னு யாராவது சொன்னா கோவம் வருதுல, அந்த கோபத்தில் இருப்பவர் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

33) எவன் கம்பி கட்டுற கதை சொன்னாலும், அதை அப்படியே நம்பாமல் ஏன் எதற்கு எப்படி என கேட்கிறோமே, அதற்குப் பின்னால் இருக்கிறார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

34) இவன் கிட்ட சாமி, ஜாதின்னு பேசுனா விதண்டாவாதம் பண்ணுவான் சண்டையாகும்னு ரெண்டு ஸ்டெப் பேக்ல நிப்போம்னு சொந்தகார்ஸ் நிக்குறாய்ங்கள்ல,

அங்க நிக்குறாரு பெரியார்...

விளையாட்டுக்கு கூட பேச மாட்றாய்ங்கயா இப்போலாம் என்டெர்டெய்ன்மென்டே இல்லாம போச்சு...

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

முகில் சேகரன்

35) அய்யா சாமி என பணிந்த காலம் போய்... என்ன அய்யரே.. .என நிமிர்ந்த காலம் தமிழ்நாட்டில் மட்டுமே வந்திருக்கிறது..

வடநாட்டில் இன்னும் பண்டித் ஜி, குருஜி, ஸ்வாமி ஜி தான்..

மேலும் அவர்கள் காலைத் தொட்டுக் கும்பிடுவது மும்பையில் கூட மிகச் சாதாரணம்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

Kathir RS

36) என் மனைவி சற்றே யோசித்தவாறு  உங்கள் நண்பர்கள் பெரும்பாலும்  பிற சாதியினர் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் அப்படி இருக்கிறார்களே ஏன் என்று கேட்டார்.  தெரியவில்லை என்றேன். ஏனென்றால் அது உங்களுக்கு தெரியும்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

Selvakumar Narayanaswamy

37) இருபது வருடங்களுக்கு முன் முதன்முறையாக வட இந்தியாவுக்கு சென்ற போது பெயர், ஊர், தந்தை என்ன செய்கிறார் என்றெல்லாம் விசாரித்த வணிகரொருவர் Surname என்ன என்றார்?

உண்மையிலேயே அன்று எனக்கு 'சர்நேம்' என்றால் என்ன என்று தெரியாது.  என்ன ஆளுங்க என்றோ, குல தெய்வம் என்ன என்றோ, என்ன ஜாதி என்றோ வெளிப்படையாகக் கேட்டிருந்தால் புரிந்திருக்கும்.

இன்சியல் கேட்கிறார் போல என்று அதைச் சொன்னேன்.  அதுக்கு என்ன அர்த்தம் என்று அவர் தூண்டிலை விட்டுக் கொண்டே இருந்தார்!

இப்ப பாரு, என் பெயர் மோதிலால் கோபால்தாஸ் பண்டாரி.  என் பெயர் கோபால்.  அப்பா பெயர் மோதிலால்.  பண்டாரி சர் நேம் !

... தாத்தா பேரைத்தான் சர் நேம்ன்னு வச்சிருக்காங்க போல?

மாரியப்பன் என் சர் நேம் என்றேன்.

இவன் என்னத்தையோ மறைக்கிறான் என அவர் லேசாக முகம் சுளித்தார்!

அதற்குள் எனக்குள் சிமிட்டிக் கொண்டிருந்த ட்யூப் லைட் எரிய  ஆரம்பித்துவிட்டது!

சார்... எங்க ஊர்ல சர் நேம் கேட்டா ஜெயில்ல போட்டுடுவாங்க. அதனால நாங்க சர் நேம் வச்சிக்கிறதில்ல, கேட்டா சொல்றதுமில்ல என்றேன்!

அவருக்கு பேராச்சர்யம்.  என்னாது ஜெயில்ல போட்டிருவாங்களா?  இதென்ன கூத்து ?

ஆமாஜி. தெருப் பலகையில் இருக்கிற சர் நேமையே தூக்கி, திரும்ப பெயிண்ட் அடிச்சி எழுதிருக்கோம்ன்னா பாருங்க.  அது நடந்தே பல வருஷமாச்சு என்றேன்.

விட்டுவிட்டார்.  சங்கிகளும், தம்பிகளும் அதைத்தான் சதி, வீழ்ச்சி என நம்பி, மீட்டுருவாக்கத்திற்கு விழைகிறார்கள். 

சங்கிகள், தம்பிகள் தாங்களே பூமர்கள் என நொடிக்கு ஒருதரம் நிரூபிக்கிறார்கள்!

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

Raja Rajendran Tamilnadu

38) பெங்களூரில் பணிபுரிந்த பொழுது சிறீநாத் ரெட்டி  என்றொரு சக ஊழியரை, ஆஃபீஸ்ல எல்லாரும் ரெட்டி என்றே அழைப்பார்கள், அவருக்கும் அதுதான் வேண்டும்.

நான் ஒருவன் மட்டும் சிறீநாத் என்றே அழைப்பேன், இத்தனைக்கும் பலமுறை என்னை கேட்டுக்கொண்டார், ரெட்டி என்று அழைக்குமாறு.

பிறகு அவருக்கு சென்னையில் ஒரு நல்ல வேலை கிடைக்க சென்னை மாற்றலாகி போனார், ஒரு மாதம் கழித்து என்னிடம் பேசிய பொழுது, நீங்க ஏன் ரெட்டி என அழைக்கவில்லை என்பது இப்போது புரிகிறது என்றார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

Vijayan Alagar

39) பெரியாரை வாசிக்காத இணையர், வட இந்தியருக்கும் தென்நாட்டவருக்கும் என்ன வேறுபாடு என்று ஒரு வட இந்தியர் கேட்ட போதுWe don’t add caste to our names என்று சொன்னாரே, அதற்கு பின்னால் இருப்பது பெரியார்!

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

Rajarajan RJ

40) மோடியின் பாதுகாப்புக்கு யாகம் செய்றோம்னு மக்கள் பணத்தை கொள்ளையடித்துவிட்டு அப்புறம் எதற்கு  மக்கள் பணத்திலேயே குண்டு துளைக்காத கார் வாங்கறீங்கனு தமிழ்நாடு கேக்குதில்ல... அங்க நிக்கிறார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

Dev JB

41) பெரியார் எங்க இருக்கார்?

ரோடு முக்குல சிலையில் இருக்கார் ..

போயி இன்னைக்கு பேஸ்புக் பாருங்க

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

Rajesh V Ravanappan

42) இன்னிக்கு அன்னபூரணி, "டேய் நான் ஆத்தா வந்திருக்கேன்டா..." ன்னு சொல்லிட்டு சாமியாடுனா தமிழ்நாடு முழுதும் விழுந்து, விழுந்து சிரிக்குதே... அங்க இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

Dev JB 

43) வயதுக்கு வந்த உடனே மாப்பிள்ளை பார்க்கும் காலம் மாறிப்போய், இப்ப என்ன அவசரம் 'பிஜி' முடிக்கட்டும்ன்னு சொல்றோம்ல, அங்க இருக்கார் பெரியார்.

ஆணா இருந்தா என்ன, பொண்ணா இருந்தா என்ன, வேலைக்கு போய் சொந்தக்கால்ல நிக்குறது தான் சுயமரியாதை அப்படின்னு சொல்ல ஆரம்பிச்சிருக்கோம்ல, அங்க இருக்கார் பெரியார்.

வேலைக்குப் போற பெண்கள் இழிவானவர்கள் என நினைப்பதில் இருந்து மாறி, படிச்சுட்டு ஏன் வீட்ல இருக்க, வேலைக்குப் போலாம்ல என கேட்கிறோமே, அங்க இருக்கார் பெரியார்.

நான் வேலைக்கு போறேன். என் ஏடிஎம் கார்டு என்கிட்ட தான் இருக்கும்ன்னு பெண்கள் சொல்றாங்கள்ல, அங்க இருக்கார் பெரியார்.

அந்தம்மாவுக்கு சாமி வந்துருச்சுன்னு சொன்னா, சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட அழைச்சிட்டு போன்னு சொல்றாங்களே அங்க இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

A Sivakumar

44) என்ன மாப்ள இன்னும் சிங்கிளா சுத்தற, பொண்ணு கிடைக்கலையா??

அத ஏன் கேக்கற? யாரைப் பாத்தாலும்  படிக்கணும், மேல படிக்கணும், வேலைக்கு போகணும், career strong  ஆகனும்னு சொல்றாங்க

சிலைகளில் மட்டும்இல்லை பெரியார்!

சிறீவித்யா

45) போன வருட கரோனாவின் போது... (3 நாள் மருத்துவமனையில் இருக்க நேர்ந்தது).. அப்பாவுக்கு நல்லாகனும்னு சாமிக்கிட்ட வேண்டிக்கடானு எங்கம்மா, பையன்கிட்ட சொல்லும் போது... "சாமியென்ன MBBS  டாக்டரா ஆயானு?" அவன் கேட்டத...  எங்கம்மா என்கிட்ட சிரிச்சுகிட்டே சொல்லும்போது... அங்க நின்னவர் பெரியார்...

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

Dev JB

46) இன்று school Direct Interaction இல் வந்திருந்த குழந்தைகள் அனைவரும்,

யாதவ்

ஜாதவ்

லோகாண்டே

சர்மா

மிஷ்ரா

சாவந்த்

நாயர்

கசலே..,  etc 

என ஜாதியை surname - களாக தாங்கிப் பிடித்திருந்த நிலையில்,

ஆசிரியை, அதிரா - விடம் what’s your name என்று கேட்க,

"My name is அதிரா" என்றாள்.

Ok, What’s your full name என்ற போது,

அதிரா வெறுமனே - "அதிரா கார்த்திக்" என்றாள்.

உடனே ஆசிரியர், என்னைப் பார்த்து,

Are you from South? என்று கேட்டதில் வாழ்கிறார் பெரியார்

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

Karthik Kannan

47) தெருவுக்கு ஒரு மந்திரவாதி இருந்த காலம் போயி, ஊருக்கு ஊர் Doctors வரக் காரணம் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

பாபு ஈவெரா

48) "அம்பாள் என்றைக்கடா பேசினாள்?" என்ற கலைஞரின் பராசக்தி வசனத்தில் இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

மலையமான் தே.கி

49) எதுக்கு பெரியார் சிலை மேல காவி பெயிண்டை ஊத்தின?

அவரை அவமானப்படுத்த!

! காவி என்பது அவமான சின்னமா? சரி... சரி...!

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

Bala Salem

50) பார்ப்பன ஜனதா கட்சியாகவே இருந்தாலும் தலைவராக ஒரு பார்ப்பனரைப் போட முடியாமல் செய்திருக்கிறாரல்லவா...

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

மாறன்

51) தொட்டா தீட்டு, பார்த்தா தீட்டு அப்படின்னு இருந்த இழிகுணம் மாறி, அனைவரும் சமம்ன்னு நினைக்குறோம்ல, அந்த சிந்தனையில் இருக்கார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

Senthil Kps

52) நாட்டின் முதல் குடிமகனை கூட, ஜாதி ரீதியில் அணுகும் போக்கு தான் இந்தியாவில் இருக்கிறது என்கிற கோபம் வருகிறதே, அந்த உணர்வில்க் இருக்கிறார் பெரியார்!

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

Rajarajan RJ

53) மாதவிடாய் என்பது தீட்டல்ல, அது பெண்களின் உடலில் ஏற்படும் இயற்கையான ஒரு நிகழ்வு என்று சிந்திக்க ஆரம்பித்தோமே, அந்தச் சிந்தனையில் இருக்கிறார் பெரியார்!

சொத்துப் பிரிப்பதற்கு முன் பொண்ணுங்ககிட்டயும் கேக்கணும்... இல்லைன்னா நாளைக்கு கேஸ் போட்டாலும் போடுவாங்க... என்ற ஆண்களின் பயத்தில் எப்போதும் இருக்கிறார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

A Sivakumar

54) எத்தனை வண்ணங்களில் வந்தாலும் சங்கிகளை எளிதாக அடையாளம் கண்டுகொள்வது யாராலே?

அய்யா பெரியாராலே!

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

மாறன்

55) ரெண்டும் பொட்ட புள்ளையா வச்சிகிட்டு எதுக்கு படிக்க வச்சிட்டு இருக்க ஒன்னுக்காவது கல்யாணத்த பண்ணலாம்ல

அப்பா: கல்யாணம் பண்ணா என்னப்பா புள்ளய பெத்துப்பாங்க. படிக்கவச்சா சொந்த கால்ல நிப்பாங்க இல்ல.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

சிறீவித்யா

56) பிறப்பின் அடையாளத்தில் எந்த பெருமையும் இல்லை. படித்து முன்னேற வேண்டும் என்று தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளிலும் நிகழ்ந்த சிந்தனை மாற்றத்திற்கு பின்னால் இருப்பது பெரியார்!

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

Rajarajan RJ

57) அந்த பொட்ட புள்ளகிட்ட ஒரு கையெழுத்த வாங்கிடப்பா

பின்னாடி வந்து கேச போட்டுவிட்றப் போகுது

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

சிறீவித்யா

58) வெளிநாடுகளில் வேலைபார்க்கும் தமிழர்களில் 10 க்கு 8 பேர் பார்ப்பனர்கள் இல்லைனு கெத்தா சொல்ல முடியுதே... அங்க நிக்கிறார் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

Dev JB

59) வெவ்வேறு தாயின் வயிற்றில் பிறந்தாலும் நாம் உடன்

பிறப்புகளே என்கிற சிந்தனைக்கு பின்னால் இருப்பது பெரியார்!

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்!

Rajarajan RJ

60) என் மனைவி அறிவாளி, என்னைவிட அதிகமாக சம்பாதிக்கிறார் என சொல்வதில் ஒன்றும் தவறில்லை. அது எனக்குப் பெருமையே என்று ஆண்களுக்கு உணர்த்தியவர் பெரியார்.

சிலைகளில் மட்டும் இல்லை பெரியார்

Subbu Palanisamy

No comments:

Post a Comment