உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங் களாக நடக்கிறது.
அங்கு ஏற்கெனவே தேர்தல் பிரச்சாரம் தொடங்கி நடந்து வரு கிறது. பாஜக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, காங் கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தேர்தல் பணிகளில் மும் மரமாக ஈடுபட்டு வரு கிறார்கள்.
கட்டவ்லி தொகுதி பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர் விக்ரம்சிங் சைனி முசாபர்பூர் நகரில் தனது சொந்த தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற கூட்டத் துக்கு சென்றிருந்தார்.
அப்போது கிராம மக்கள் சட்டமன்ற உறுப்பினர் விக்ரம்சிங் சைனிக்கு எதிராக முழக்கம் எழுப்பினார்கள். அவர் களிடம் சட்டமன்ற உறுப் பினர் விக்ரம்சிங் சைனி வாக்கு வாதம் செய்தார்.
ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து அவருக்கு எதிராக முழக்கம் எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதையடுத்து அவர் அங் கிருந்து காரில் புறப்பட் டார். அவரது காரை பின் தொடர்ந்து சென்று விரட்டிப் பிடித்த கிராம மக்கள் தொடர்ந்து அவருக்கு எதிராக முழக்கம் எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதையடுத்து அவர் அங்கிருந்து காரில் சென்று விட்டார்.
ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட் டங்களை எதிர்த்து விவசாயிகள் ஒரு வருடமாக போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகளின் தொடர் போராட் டம்காரணமாக வேளாண் சட்டங்களை யும் ஒன்றிய அரசு திரும்ப பெற்றது.
இந்த விவகாரத்தில் பாஜக மீது மக்கள் கோபத் தில் இருந்தனர். அதன் காரணமாகவே பாஜக சட்டமன்ற உறுப்பினரை விரட் டியடித்ததாக கூறப் படுகிறது.
மேலும் எம்.எல்.ஏ. விக் ரம்சிங் சைனி அடிக்கடி பரபரப்பான அறிக்கை களை வெளியிடுவது வழக் கம். கடந்த 2019-ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட ஒரு அறிக்கை கயில், "இந் தியாவின் பாதுகாப்புக்கு எதிரா னவர்கள் மீது வெடி குண்டு வீசுவேன்" என்று மிரட்டினார். அதற்கு ஒரு வருடத்துக்கு முன்பு நமது நாடு இந்துஸ்தான் (இந்துக் களுக்கான தேசம்) என்று அழைக்கப்படுகிறது என்று கூறினார்.
மேலும் பசுக்களை கொல்பவர்களின் கை-கால்களை உடைப் போம் என்றும் அவர் ஏற்கெனவே மிரட்டல் விடுத்திருந்தார்.
No comments:
Post a Comment