ஈரோடு, ஜன. 20- ஈரோடு மாவட்டம் முழுவதும் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.
ஈரோட்டில் பெரியார் படிப்பக வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா பெரியார் மன்றத்தில் 15.1.2022 அன்று காலை 9:00 மணியளவில் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண் முகம், மாவட்ட செயலாளர் மா.மணி மாறன், பேராசிரியர் ப.காளிமுத்து, பொதுக் குழு உறுப்பினர்கள், கோ.பாலகிருஷ்ணன், இரா.நற்குணன், மாவட்ட சுயமரியாதைத் திருமண மய்ய அமைப்பாளர் ப.சத்திய மூர்த்தி, பெரியார் படிப்பகம் வாசகர் வட்டத் தலைவர் பி.என்.எம். பெரியசாமி, மகளிரணி மாலதி பெரியசாமி, மண்டல மகளிரணி செயலாளர் ராஜேஸ்வரி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா மணிமாறன், மாநகர மகளிரணி அமைப்பாளர் கா.ஜீவரத்தினம் காமராஜ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தே.காமராஜ், மண்டல இளைஞரணி செயலாளர் சா.ஜெபராஜ் செல்லத்துரை, மாவட்ட இளைஞரணித் தலைவர் தமிழ்ச் செல்வன், திராவிடர் பேரவை நிறுவனத் தலைவர் மாசிலாமணி, பாபு, சாந்தி இரத்த பரிசோதனை பெ.சக்திவேல், பெரியார் மன்றம் காவலர் செல்வம், பெரியார் பிஞ்சுகள் ஜீ.க., உ.ஜெ.மகிழன், து.பார்கவி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
சிவகிரி பேரூராட்சியில் கு.சண்முகம் அரவை மில் முன்பு 14ஆம் தேதி மாலை 5:00 மணிக்கு மாவட்ட கழக அமைப்பாளர்.சிவகிரி கு.சண்முகம், மாவட்ட கழக செய லாளர் மா.மணிமாறன், கவிதா மணி மாறன், விஜயலட்சுமி, நகர கழக தலைவர் வே.கோபால், கொடுமுடி ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் திராவிடமணி, ஈரோடு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் சிவகிரி வாசு தேவன், இந்திய கம்யூனிஸ்டு நகர செய லாளர் மு.வரதராஜன், மதிமுக நகர செய லாளர் எஸ்.நல்லசிவம், மாவட்ட விவசாய சங்க தலைவர் (மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்) கண்ணுச்சாமி, வேல்முருகன் எல்.அய்.சி. பணியாளர், மாதர் சங்க கல்யாணி, மருத்து வத் துறையைச் சேர்ந்த, வைரவேல் மற்றும் மணிமேகலை, பெரியார் பிஞ்சு வை.கவின்குமார், வங்கித் துறை நவீன் குமார், பாலா டெக்ஸ்.அருணாசலம், உழவர் வைரமணி உள்ளிட்ட பொது மக்கள் பலர் கலந்து கொண்டு தமிழ்ப் புத்தாண்டு விழா கொண்டாடினர்.
சித்தோடு பேரூராட்சி பகுதியில் உள்ள கன்னிமா காடு தந்தை பெரியார் நகரில் பெரியார் படிப்பகம் முன்பு திராவிடர் பேரவை மற்றும் திராவிடர் கழகம் சார் பில் தமிழ்ப் புத்தாண்டு - தமிழர் திருநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் திராவிடர் பேரவை நிறுவ னத் தலைவர்.மாசிலாமணி, பாபு, திரா விடர் கழகம் சார்பில் மண்டல மகளிரணி அமைப்பாளர்.ராஜேஸ்வரி,மாவட்ட இளைஞரணி தலைவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தந்தை பெரியார் நகர் பொது மக்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து விழாவினை சிறப்பித்தனர்.
அம்மாபேட்டை ஒன்றியம் பூதப்பாண் டியில் பெரியார் பண்ணையின் திராவிட நாற்றுகள் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா,தமிழர் தலைவர் ஆசிரி யர் பிறந்தநாள்,விழா மற்றும் தமிழ் புத் தாண்டு விழா, பள்ளி மாணவர்களுக்கு சிறிய அளவிலான பேச்சுப் போட்டி, விளையாட்டு போட்டிகள் 14.1.2022 அன்று காலை 10:00 மணிக்கு பூதப்பாடியில் தமிழ்நாடு அரசின் கரோனா கட்டுப்பாடு களை கடைப்பிடித்து கொண்டாடப்பட் டது. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும், ‘உண்மை', ‘பெரியார் பிஞ்சு', மற்றும் இயக்க நூல்கள், பரிசாக வழங்கப்பட்டன. பெரியார் பண் ணையின் திராவிட நாற்றுகள் த.புஷ்பராஜ், க.பிரவீண்குமார், எஸ்.அருண்குமார், வேலுமணி ஆகியோர் சிறப்பாக களப் பணியாற்றி தங்களது முதலாவது தமிழ்ப் புத்தாண்டு போட்டிகளை நடத்தினர். இச்செயலை பாராட்டி மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம்., மாவட் டத் தலைவர் கு.சிற்றரசு, மாவட்ட செய லாளர் மா.மணிமாறன், மண்டல இளை ஞரணி செயலாளர் சா.ஜெபராஜ் தொலை பேசி வழியாக தொடர்பு கொண்டு வாழ்த் தினர்.
பெருந்துறை ஒன்றியம் விஜய மங்கலத் தில் ஒன்றிய தலைவர் ச.சசிதரன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் நா.மோகன் ராஜ், இளைஞரணி தலைவர் ம.அன்பு பிரசாந்த், ஒன்றிய இளைஞரணி பொறுப்ப £ளர்கள் ச.சதீஸ்குமார், பாஸ்கர் ஆகிய தோழர்கள் தை முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டு என திண்ணைப் பிரச்சாரம் செய்தார்கள்.
No comments:
Post a Comment