அப்பியம்பேட்டை தந்தை பெரியார் சிலை அருகில் திராவிடர் திருநாள் தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 20, 2022

அப்பியம்பேட்டை தந்தை பெரியார் சிலை அருகில் திராவிடர் திருநாள் தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா

குறிஞ்சிப்பாடி ஒன்றியம் அப்பியம்பேட்டை திராவிடர் கழகம் சார்பில் 14.1.2022 அன்று காலை 10 மணி அளவில் அப்பியம்பேட்டை தந்தை பெரியார் சிலை அருகில் திராவிடர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு நாள், பொங்கல் விழா மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர் தலைமையில் கொண்டாடப்பட்டது. கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பொங்கல் வாழ்த்து முழக்கங்களை எழுப்பினார். மண்டல செயலாளர் தாமோதரன், மண்டல இளைஞரணி செயலாளர் பஞ்சமூர்த்தி, பெரியார் வீர விளையாட்டு கழக தலைவர் மாணிக்கவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் வேலு, ஒன்றிய செயலாளர் செந்தில், கிளைக் கழக தலைவர் தனசேகரன், மகளிர் அணி நிர்வாகிகள் குணசுந்தரி, சத்தியவதி, மங்க லட்சுமி, ஏழை முத்து, கட்டியம் குப்பம் சேகர், வேகாக்கொல்லை வேணுகோபால் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். கழக மகளிரணி தோழர்களும் கழகத் தோழர்களும் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment