கன்னியாகுமரியில் தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா-தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் விழா நிகழ்ச்சிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 20, 2022

கன்னியாகுமரியில் தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா-தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் விழா நிகழ்ச்சிகள்

ஒழுகினசேரி, ஜன. 20- குமரிமாவட்ட பகுத்தறி வாளர் கழகம் சார்பில் நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் தமிழர் தலைவர்  ஆசிரியர் பிறந்த நாள் விழா, தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் விழா சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலை வர் . சிவதாணு தலைமை உரையாற்றினார். மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் முன்னிலை வகித்து அய்யாவின் அடிச் சுவட்டில், கற்போம் பெரியாரியல், ஆர். எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை ஆகிய நூல்களை அறிமுகம் செய்து உரையாற் றினார். .முத்துவைரவன், எஸ்.பி. ஆறு முகம் உள்பட தோழர்கள் பலரும் நூல் களை பெற்றுக்கொண்டனர். 

மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந் தன் தொடக்கவுரையாற்றினார். அகில இந்திய முற்போக்கு பேரவை மாநில துணைத்தலைவர் சி.சுந்தரம், இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், கு.சந்திரன், மணிமேகலை ஆகியோர் உரையாற்றினர்.  மாவட்ட அமைப்பாளர் பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் .நல்ல பெருமாள், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் இரா.லிங்கேசன், இளைஞரணி எஸ்.அலெக்சாண்டர், தோழர்கள் குமரிச் செல்வன், செல்லையா, .செல்வராசு,நகர துணைத் தலைவர் எச். செய்க்முகமது ,சியாமளா,  மற்றும் கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். ஒன்றிய செயலாளர் குமாரதாஸ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment